முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி அப்பல்லோ ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றியும், சிகிச்சை முறை குறித்தும் அப்பல்லோ ஆஸ்பத்திரி சார்பில் அவ்வப் போது தகவல்கள் தெரிவிக் கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதாவின் உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். படிப்படியாக அவர் குணமடைந்து வரு கிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் தேவையில்லாத வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு சார் பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். யூடியுப், பேஸ்புக், வாட்ஸ்-அப், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதள யங்கள் வாயிலாகவே அதிக மாக வதந்தி பரப்பப்பட்டு வரு கிறது. இது தொடர்பாக தவறான தகவல்களை பரப்பு வோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியவர் களை பிடிக்க சென்னை மாநகர போலீசில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் தனிப்படையினர் சமூக வலைதளங்களை கண்காணித்து வதந்தி பரப்புவோர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இது தொடர்பாக சென்னை போலீசார் ஏற் கனவே 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை எண்ணூரில் 2 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் ஜெயலலிதா உடல்நிலை பற்றி அவதூறாக பேசிய அக்கட்சி நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த சகாயம் என்பவர் தனது பேஸ்புக்கில் ஜெயலலிதா உடல்நிலை பற்றி தவறான தகவல்களை பதிவு செய்து இருந்தார். இதனை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து சகாயத்தை நேற்று இரவு சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த னர். இன்று அவர் கோர்ட் டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படு கிறார். ஜெயலலிதா உடல்நிலை பற்றி வதந்தி பரப்பியதாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.