அரசியல்வாதியின் அட்டகாசத்தால் அடங்கியதா இளைஞர் பட்டாளம்! ‘புயலா கிளம்பி வர்றோம்’ படத்தில் அதிரடி!

unnamed-5

அந்த ஊரில் மிகப்பெரிய கட்சியில் உள்ள அரசியல்வாதி போடும் அராஜக ஆட்டம் பேயாட்டமாக இருந்து வந்தது. இந்த நிலையில் கதாநாயகன் தமன் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கேபிள் டி.வி.நடத்த துவங்கினான். தமனின் வேலைத்திறமையையும் அவனது நண்பர்களின் உழைப்பும் சேர்ந்து அவனுக்கு பணமும் புகழும் குவிந்தது. இதை பார்த்த அந்த அரசியல்வாதி தன்னுடைய ஆட்டத்தை நாயகன் தமன் மீதும் அவனது நண்பர்கள் மீதும் தமது பவரை பயன்படுத்தி பாடாய் படுத்தினான்.

இதனால் மிகவும் பாதிப்பாடைந்தான் தமன். நண்பர்கள் கூடிப்பேசினர். அரசியல்வாதியை பழிவாங்க திட்டம் போட்டு கொடுத்தனர். அதற்கு தமன் அதெல்லாம் வேண்டாம். நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று கூறிவிட்டான்.
அரசியல்வாதியின் தொழில் பார்ட்னர்கள் உடனிருந்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் பாதிப்புக்குள்ளாகி அடங்க ஆரம்பித்தனர் அரசியல்வாதிக்கு சந்தேகம் வந்தது. தன்னிடம் இருப்பவர்களை ஒவ்வொருவராய் பிரிப்பவன் யார்? எதற்காக இதை எல்லாம் செய்கிறான் என்று பதில் தெரியாமல் தவித்தான்.

பின்னர் அவனுக்கு தெரிந்து அவன் தமன் தான் என்று. இந்த நிலையில் அரசியல்வாதியை ‘ஸ்கெட்ச்’ போட்டு து£க்கினான் தமன். மிரண்டுபோன அரசியல்வாதி தமனிடம் கெஞ்சினான். ஆனால் அரசியல்வாதிக்கு தமன் கொடுத்தத தண்டனை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த தண்டனை யாரும் எதிர்பாராதது. எல்லோரும் திகைத்து நின்றனர் என்று மூச்சுவிடாமல் புதிய இயக்குனரான ஜி.ஆறுமுகம் கூறிய கதைதான் ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள ‘புயலா கிளம்பி வர்றோம்’.

‘சேதுபூமி’, ‘தொட்டால் தொடரும்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘அச்சர்யம்’, ‘சும்மா நச்சுனு இருக்கு’ போன்ற படங்களில் நடித்த தமன் நாயகனாக நடிக்கும் இதில் இவருக்கு ஜோடியாக மதுஸ்ரீ நடிக்கிறார். மேலும் இதில் சிங்கம்புலி, கும்கி அஸ்வின், ஆர்.என்.ஆர். மனோகர், திருமுருகன், ‘பசங்க’ சிவகுமார், ஆழகன் தமிழ்மணி, ரிஷா, ஜெரால்டு, சர்மிளா, சாமு ஆகியோரும் நடித்துள்ளனர்.

மதுரை, பாண்டிச்சேரி, சென்னை, கொடைக்கானல் பகுதிகளில் படம் வளர்ந்துள்ளது. சார்லஸ்தனா இசையில் சாரதி, கருப்பையா, குரு அய்யாதுரை மூவரும் பாடல் எழுதி உள்ளனர். விஜய் வி. ஒளிப்பதிவு செய்ய, ஆக்ஷன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், பாலாஜி, தினா, ராதிகா மூவரும் நடன பயிற்சியையும், முத்துவேல் கலையையும், ஒய். எஸ்.டி. சேகர் தயாரிப்பு மேற்பார்வையும் சதீஷகுமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். நந்தகுமார் வசனம் தீட்டியுள்ளார். ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் வி.அரிகரன் தயாரித்துள்ளார். பல குறும்படங்களை இயக்கி விருதுகள் வாங்கி உள்ள ஜி.ஆறுமுகம் இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார்.

Leave a Response