இம்மாத இறுதியில் ‘ஆண்டவன் கட்டளை’..!

aandavan-kattalai

‘காக்கா முட்டை’ படத்திற்கு பிறகு இயக்குநர் மணிகண்டனின் ‘குற்றமே தண்டனை’ சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் கலவையான விமர்சனங்களே பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்கியுள்ள படம் ‘ஆண்டவன் கட்டளை’.

இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ புகழ் ரித்திகா சிங் டூயட் பாடி ஆடியுள்ளார். ‘கோபுரம் பிலிம்ஸ்’ சார்பில் அன்புசெழியன் தயாரித்துவரும் இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். இதன் ஷூட்டிங் முடிந்து இறுதிக்கட்ட பணிகள்  நடைபெற்று வருகிறது.
நேற்று வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரல் ட்ரெண்டு அடித்து வருகிறது. படத்தை இம்மாத இறுதியில் வெளியிடவுள்ளது ‘ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம்.

Leave a Response