இருமுகன் – விமர்சனம்

maxresdefault-1

இருமுகன் தமிழ் சினிமாவின் அடுத்தக் கட்ட திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும், ஆனந்த் சங்கரை பாரட்ட வார்த்தைகளே இல்லை, ஒரு மெடிக்கல் த்ரில்லருக்காக இவ்வளவு யோசிச்சி அதற்காக மெனக்கொடுத்து எதோ ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் அதை அறை குறையாக சொல்ல கூடாது என்று அவர் நினைத்ததுக்கு சலியூட்.

உளவுத்துறை (ரா) அதிகாரிகளான  விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர்.

இதன்பின்னர் காதலர்களாக இருந்த விக்ரமும், நயன்தாராவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் முடிந்த பின் மலைப்பகுதியில் இருவரும் நின்று கொண்டிருக்கும்போது, யாரே ஒருவர் நயன்தாராவை சுட்டு வீழ்த்துகிறார். குண்டடிபட்ட நயன்தாரா மலையில் இருந்து கீழே விழுகிறார்.

அதன்பின் விக்ரம் உளவுத்துறையில் இருந்து ஓய்வு பெற்று 4 வருடங்கள் கழிந்த நிலையில், மலேசியாவில் இந்திய தூதரகம் மர்ம நபர்களால் தாக்கப்படுகிறது. அந்த தாக்குலை நடத்தியது லவ் என்பது இந்திய உளவு அமைப்புக்கு தெரிய வருகிறது.

லவ்வை இதுவரை யாரும் பார்த்தது கிடையாது. நயன்தாராவும், விக்ரமும் மட்டும்தான் பார்த்திருக்கிறார்கள். எனவே, லவ்வை பிடிக்க மறுபடியும் உளவுத்துறைக்கு அழைக்கப்படுகிறார் விக்ரம். முதலில் இதற்கு மறுக்கும் விக்ரம் பிறகு சில நிபந்தனைகளுடன் அந்த பொறுப்பை ஏற்கிறார்.

உளவுத்துறை அதிகாரியான நித்யாமேனனுக்கு உதவியாளராக செல்லும் விக்ரம் லவ்வை கண்டுபிடித்து எப்படி வீழ்த்தினார்? விக்ரமின் முதல் தாக்குதலில் லவ் உயிர்தப்பியது எப்படி? அவன் எதற்காக இந்திய தூதரகத்தை தாக்கினான்? என்பதே மீதிக்கதை.

என்னதான் விக்ரம் கஷ்ட்டப்பட்டு உடலை உறுக்கி ஒல்லியாகி நடித்தாலும், குண்டாக நடித்தாலும் பல பல வெரைட்டியில் நடிச்சி காமிச்சாலும் கடைசில “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” ன்னு அதையும் அவரோட ஃப்ளாப் லிஸ்டுல சேத்துருவாய்ங்க. அதனாலையே இந்த திரைப்படத்தில் மிகவும் கவனம் எடுத்து நடித்துள்ளார் கட்டாயம் விக்ரமுக்கு இந்த திரைப்படம் வெற்றி படம்.

நித்தியா மேனனை பார்த்ததும் ஒரு டயலாக் நியாபகம் வந்தது : “டைனிங் டேபிள் ஹைட்டுல இருக்க உன்னையெல்லாம் எப்புடி போலீஸ் வேலைக்கு எடுத்தாங்க” ன்னு தெரியல அப்படின்னு தான் சொல்ல தோனுது. ஆனால் நித்தியா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும் என்னமா நடிக்குது அந்த பயபுள்ள.

நயந்தாராவின் நடிப்பை சொல்ல வேண்டுமா வழக்கம் போல படத்தை தன் தோல் மீது வைத்து சுமந்து செல்கின்றார், நயந்தாராவுக்காக இன்னும் கொஞ்சம் நாடகள் கூட படம் திரையரங்குகளில் ஒடலாம்.

இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் என்னவென்றால், அது ஹாரிஸ் ஜெயராஜ் மட்டும் தான்.  அதுதாங்க, என்னதான் அவரு கையில மியூசிக் சாமானுங்க இருந்தாலும், ஆனா ஊனா அத டமடமன்னு அடிச்சி படத்த ரசிக்க விடாம செய்வதா.  ஒளிப்பதிவாளர் ஆர்..டி.ராஜசேகர் காமெராவை கையாண்ட வகையை கண்டிப்பாக பாராட்டியே ஆகணும்.

மொத்ததில் இருமுகன் அதிரடி முகம்..

– ஸ்ரீநாத்

Leave a Response