தர்மதுரை சினிமா விமர்சனம்..!

dharmadurai

தர்மதுரை சீனுராமசாமியின் அடுத்தக் காவியம் என்றுதான் சொல்ல வேண்டும் என்னடா இப்படி சொல்லுரான்னு பாக்குரீங்களா..? அட ஆமாங்க படத்த அப்படி தான் எடுத்து வைத்துள்ளார் இவர்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் தமன்னா, ஸ்ருதிடாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது.

படத்தில் மிகவும் அழகாக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. விஜய் பேசும் வசனம் எல்லாம் கேட்பதர்க்கே அழகாக இருந்தது அந்த வகையில் வசனகர்த்தாவை பாராட்டியே ஆக வேண்டும் அது மட்டும் அல்ல விஜய் சேதுபதி படத்தில் அழுகின்ற காட்சி வரும் போது எல்லாம் நம்மையும் சேர்த்து அழ வைத்துள்ளார் அந்த வகையில் விஜய் ஓர் தேர்ந்த நடிகராகிவிட்டார் என்பது தெரிகின்றது.

தமன்னா அழகான டாக்டர் படம் முழுவதும் வரும் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிரிப்பாக செய்து முடித்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஸ்ருதிடாங்கே படத்தில் சில நேரங்களில் மட்டும் வருகின்றார் அவர் செய்யும் ஓவர் ஆக்டிங்கை தாங்கவே முடியலடா சாமி என்று சொல்ல வைத்து விட்டார் அவர்.

ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தின் மூலம் உலகொங்கும் உள்ள ரசிகர்களை தனது பக்கம் வளைத்துப் போட்டவர் இந்த படத்திர்க்கு பிறகு அவருக்கு சிலை வைத்தால் கூட ஆச்சதிய படுவதர்க்கு இல்லை அந்த அளவுக்கு தனது நடிப்பால் அவரை தவிர வேறுயாரையும் பார்க்காத அளவுக்கு பார்த்துக் கொண்டுள்ளார். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா.

ராதிகா சரத்குமார் படத்திர்க்கு இன்னொரு பலம் என்றுதான் சொல்ல வேண்டும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிரப்பாக செய்துள்ளார்.

படத்தின் கதையை பெருத்தவரை கடை கோடி கிராமத்திலுருந்து வந்த டாக்டர் படிக்கும் முதல் மாணவன் விஜய் சேதுபதி அங்கு உள்ள தலமை ஆசிரியரை தனது வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு அவர் சொன்ன பாதையிலையே நடக்கும் மாணவர்கள் இதனால் ஓர் கிராமத்திர்க்கு சொன்று தனது சேவையை செய்துக் கொண்டிருக்கும் விஜய் அங்குள்ள ஐஸ்வர்யா மீது காதல் கொல்கின்ரார் இதனால் தனது வீட்டு சம்மதத்துடன் அவளை நிச்சயம் செய்துக் கொல்கின்ரார் அதன் பின் தனது தம்பிகள் எம்.எஸ்.பாஸ்கரிடம் வரதட்சனை கேக்கின்றனர் இதனால் பாஸ்கர் விஜய்சேதுபதிக்கு பெண் கொடுக்க முடியாது என்று சொல்லி விடுகின்றார் பின்னர் அவரை அவர் திருமணம் செய்தாரா இல்லை வேறுயாரையாவது திருமணம் செய்தாரா தனது மருத்துவ தொண்டை தொடர்ந்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை..

யுவன் தனது பின்னணி இசையால் படத்தை வேறு ஓர் இடத்திர்க்கு இதை எடுத்து சொன்றுள்ளார்.

மொத்தத்தில் இந்த தர்மதுரை மக்களின் மனதை கொள்ளை கொள்ள வந்த மக்கள் துரை என்றுதான் சொல்ல வேண்டும்

Leave a Response