இறுதி நாள் படபிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்த சிம்பு! கடுப்பான கவுதம் மேனன்!!

Angry Gautham Menon AYM Simbu
கவுத்தம் மேனன் இயக்கத்தில், சிம்பு மஞ்சிமா மோகன் இனைந்து தமிழில் உருவாகும் திரைப்படம் “அச்சம் என்பது மடமையடா”. இந்த திரைப்படம் தமிழுடன் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் உறவாகிறது. தெலுங்கில் சிம்புவுக்கு பதிலாக நடிகர் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா கதாநாயகனா நடிக்க இரு மொழிகளிலும் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாபா சேகால், டேனியல் பாலாஜி மற்றும் சதீஷ் கிருஷ்ணா நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு A.R.ரஹமான் இசையமைக்க, டான் மகர்தர் ஒளிப்பதிவை செய்ய, போடான் கதாஸ் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் இரு மொழிகளுக்கான சன் டே(Sun Day) என சொல்லப்படும் இறுதி நாள் படப்பிடிப்பு இன்று விடியற்காலை 5:00 மணிக்கு நடத்துவதா திட்டமிடப்பட்டது. நடிகர் சிம்புவை தவிர அணைத்து நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் திட்டமிட்டபடி பாலவாக்த்தில் உள்ள படபிடிப்பு தளத்தில் ஆஜர். தெலுங்கு மொழிக்கான படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. சிம்பு எப்போதும் போல் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்த காரணத்தினால், திரைப்படத்தின் தமிழாக்கமான “அச்சம் என்பது மடமையடா” இறுதி நாள் படப்பிடிப்பு தற்போது வரை அந்தரங்கத்தில் தொங்குகிறது. சிம்பு படபிடிப்புக்கு ஆஜர் ஆகாதா காரணத்தினால் கடுப்பான படத்தின் இயக்குனர் கவுதம் மேனன், ‘சிம்பு இப்படி பொறுப்பில்லாமல் இருக்கிறாரே’ என்று புலம்பியுள்ளார். கவுதம் மேனன் சிம்பு மீது உள்ள கோபத்தை அவருடைய உதவியாளர்களிடம் காட்டி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response