“உறியடி” திரைப்பட விமர்சனம்:

Uriyadi Review
நடிகர்கள்: விஜயகுமார், மைம் கோபி, சிடிசன் சிவகுமார், சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள், ஹென்னா பெல்லா.

தொழில்நுட்ப கலைஞர்கள்: எழுது, இயக்கம் மற்றும் தயாரிப்பு – விஜயகுமார், இணை-தயாரிப்பு – நலன் குமாரசாமி, சமீர் பரத் ராம், சதீஷ் சுவாமிநாதன், ஒளிப்பதிவு – பால் லிவிங்க்ஸ்டன், படத்தொகுப்பு – அபினவ் சுந்தர் நாயக், பாடல்களுக்கு இசை – மசாலா காபி, பின்னணி இசை – இயக்குனர் விஜயகுமார், சண்டை பயிற்சி – விக்கி.

“உரியடி”—-கண்களை கட்டி விடுவார்கள் ஆனால் இலக்கு அடைய அடிக்க வேண்டும். பல தடைகள் வந்தாலும் வெற்றி பெறவேண்டும். அதே போல அடிக்கிறது யாரென்று தெரியாமல் அடி வாங்க வேண்டிய நயவஞ்சகர்களை ஹீரோ+நண்பன் இணைந்து துவம்சம் செய்வதே “உரியடி”.

கத்தி மேல் அதுவும் பெரிய பெரிய கத்திமீது பயணிக்கும் கதை தான் “உறியடி”. திரைக்கதையில், காட்சி அமைப்பில் கொஞ்சம் சறுக்கினாலும் சதக்! ஆனால் பிரமாதமாக இயக்குனர் விஜய்குமார்(அவரே பிரதான கேரக்டராக வருவது கூடுதல் பலம்) நடித்து இயக்கியுள்ளார். படத்தின் இன்னொரு பெரிய பலம் பீஜ்ஜியம் RR’ல் நல்ல கவனம் செலுத்தி அசத்திவிட்டார்.

கதை- ஒரு ஊர்(பெயரெல்லாம் கேட்க கூடாது, ஏன்னா சொல்லவில்லை) அங்கே கல்லூரி + விடுதி, ஒரு பைபாஸ் சாலை “தாபா,” அங்கே எப்ப பாத்தாலும் மது அருந்தி மகிழும் மாணவர்கள், ஒரு சமயம் கடைக்கு வரும் வயதான ஒருவரை கடை மேனேஜர் அவமதிக்க, காரணம் கேட்டு அவருக்கு உதவிடும் கல்லூரி மாணவர்கள்(4 பேர்) ஜாதி வெறி பசிக்கு என்ன ஆகிறார்கள் என்பது ஒரு புறம், தனது ஜாதி ஓட்டுகளை வைத்து அந்த மது கடையின் ஓனர்(ஜாதி + மது கடை ஓனர்) ஆஹா இயக்குனரின் சாமர்த்தியம்) தனது ஜாதி ஓட்டுகளை வைத்து அரசியலில் காலூன்ற செய்கிற சதி படம் + பாடம்.

ஒருவருக்கு சிலை வைத்தால் அதன் பிறகு என்னாகும் என்பதை அருமையாக காட்டிய படம். நடித்த அத்தனைபேரும் இயல்பாக நடித்து சிறப்பித்துள்ளனர். “குவாட்டர்” என்ற பெயருடன் வரும் மாணவர் குட் ஆக்டிங். ஒயின் ஷாப்புக்கு டூப்ளிகேட் மது வகைகளை சப்ளை செய்யும் ஸ்திரிலோலன் ஒரு புறம் இந்த மாணவர்களால் அவமானப்பட அவனால் பழி வாங்கப்படும் குவாட்டர், இந்த சதிக்கு ஒயின்ஷாப் ஓனர் உதவி செய்வது திக் திக் சஸ்பென்ஸ், காரணம் அந்த மாணவன் அவங்க ஜாதி இல்லையாம். குமாராக மைமஸ் கோபி யதார்த்த வில்லன் இனி அவர் பல படங்களில் வேற மாதிரி வருவார். பாராட்டுக்கள் மைம் கோபி.

ஆக படம் சொல்லும் பாடம்..மது அருந்தினால் விளைவு என்ன? ஜாதி வெறி மனிதர்கள் கைகளில் இளைஞர்கள் எப்படி வீணாகுகிறார்கள் என்பதே! படத்தில் வரும் ஸ்டண்ட் காட்சிகளுக்கு தனி பாராட்டு.. “உறியடி”-வெற்றிப்படி. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, தங்களது கல்விக்கு உதவும் பாடத்தை(lab) பயன்படுத்துவது கோபத்தின் உச்சம்.

இப்படி சிலரை வதம் செய்துவிட்டு வெளி உலகுக்கு அதன் காரணத்தை ஒரு கடித்ததின் வரிகளில் கூறுவது இன்றைய காலம் சொல்லும் கடிதம், பாராட்டுக்கள்.

ஜாதி வெறி பிடித்த பெரியவர், வாரிசாக வருபவரை மச்சானாக காட்டியிருப்பதும் டைரக்டரின் சாமர்த்தியம்.

Leave a Response