“சுட்ட பழம் சுடாத பழம்” திரைப்பட விமர்சனம்:

Sutta Pazham Sudatha Pazham Review 1
நடிகர்கள்: ராஜா, காஷ்மீரா, மதுமாரன், பவர்ஸ்டார் சீனிவாசன், அபிநயன், ரோபோ சங்கர், பயில்வான் ரங்கநாதன், லதாராவ், கிங்காங், வடிவேல் பாலாஜி, R.செல்வன் மற்றும் பலர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு – R.சிவன் மற்றும் R.செல்வன், கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – சிவா.ஜி, பாடல்களுக்கான இசை – கார்த்திக் ஆச்சார்யா, பின்னணி இசை – கணேஷ் ராகவேந்திரா, ஒளிப்பதிவு – R.H.அசோக், படத்தொகுப்பு – J.இளங்கோ, பாடல்கள் – கார்த்திக் ஆச்சார்யா, ஜெய முரசு, முத்து விஜயன்.

பிரசவ வலியால் அவதிப்பட்டு காரில் பயணம் செய்யும் கோடீஸ்வரனின் மனைவி சாதாரண மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவசரத்தில் குழந்தை மாறிவிட, கதை ஆரம்பம். பல வருடங்களுக்குப்பிறகு, அந்த இடம் மாறி வளரும் குழந்தைகள் ஒரே பள்ளியில் படிக்க(இருவரின் பெயர்களும் ஒன்றாக இருப்பது அதிசியம்), இப்படி ஒரு புறம் கதை போக, பிஸினஸ் போட்டியில் கோடிஸ்வரன் மகனை கடத்த நான்கு காமெடி கடத்தலகாரர்களை அணுக, அதன் பிறகு நிகழ்வது காமெடி. இந்த கதையுடன் சினிமா நடிகை ஒருவர், தனது சித்தி தன்னுடைய காதலுக்க எதிர்ப்பு காட்ட நடிகை வீட்டை விட்டு ஓடுவது அப்போது நடிகை கடத்தப்பட, கடத்தப்பட்ட நடிகையுடன் தனது காதலனும் கடத்தப்பட செம சுவாரஸ்யம். காமெடி கடத்தல் கும்பலை பிடிக்க ஒரு CID எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோற்க, கடத்தப்பட்ட மாணவன் முதலில் கோடிஸ்வரன் மகன் இல்லை, என்பது ஷாக.

ஆனால் கோடிஸ்வரனின் நண்பர் பழைய(1975-76) ஆல்பத்தில் தன் முகத்தை காண, கடத்தப்பட்ட ஆட்டோ டிரைவரின் மகனின் முகமும் ஒன்றாக இருக்க, உடனே மருத்துவமனைக்கு சென்று விசாரிக்க, தன் கோடிஸ்வர திமிரை விட்டு திருந்துவது சூப்பர். கடத்தப்பட்ட ஆட்டோ டிரைவரின் மகன் சாமார்த்தியமாக காவல்துறை அதிகாரிக்கு போன் செய்ய செம டிவிஸ்ட். முடிவில் ணுபமாக மாணவன் திரும்புது, நடிகையின் சித்தி திருந்துவது எல்லாமே சுபமாக படம் முடிய பிரமாதம். நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன், கிங்காங், ரோபோ சங்கர் மற்றும் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் இயல்பாக நடித்துள்ளனர். இசை அளவாக இருந்தது ஒளிப்பதிவு நேர்த்தி, ஆக சுட்ட பழம் சுடாத பழம் பார்க்கலாம் ரசிக்கலாம்.

Leave a Response