ஒவ்வொரு ஹீரோவுக்கும் போலிஸ் வேஷம் ஒரு கனவு – ” சேதுபதி” விமர்சனம்:

Sethupathi
“சேதுபதி”—- ஒவ்வொரு ஹீரோவுக்கும் போலிஸ் வேஷம் ஒரு கனவு, ஒரு கெத்து, ஒரு ஸ்டைல், தனித்துவமாக இருக்கும் அந்த வகையில் விஜயசேதுபதிக்கு “சேதுபதி ” கேரக்டர், அசத்திவிட்டார். ஒரு போலிஸ் அதிகாரியின் கொடூரகொலை, தன் ஏரியாவில் நிகழ்ந்த இந்த கொலைக்கு காரணமான வில்லனை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த முயற்சிக்கிறார. இந்த விஷயத்தில் நடப்பது என்ன! புதிய காட்சிகளுடன் படம் பிரமாதமாக உள்ளது.

நேர்மையாக இருக்கும் போலிஸ், வீட்டில் இல்லாதபோது வில்லன்களால் ஆபத்து வரும்போது அவருடைய சின்னவயசு மகன் உதவியுடன் வில்லன்களை ஓடவைக்கும் காட்சி சூப்பர். தியேட்டர்களில் கைதட்டல் ஒலி அதிர வைப்பது உறுதி. மாஸ்டர் ராகவன், பேபி தனுஷ்ரா நடிப்பு அருமை. வில்லனாக வரும் வாத்தியார் (வேலார் ராமமூர்த்தி), பார்டர் மார்க்கில் பாஸ்மார்க் பெறுகிறார். பாடலுக்கான இசைக்கு பாராடுக்கள். பின்னணி இசை சில இடங்களில் இதமாக இருந்தாலும் பல காட்சிகளில் “ஒலி” வலியை தருகிறது. முக்கியமான சண்டைகாட்சி (கர்சீப்பால் சேதுபதி முகத்தை மறைத்துக்கொண்டு வில்லன்களை துவம்சம் செய்யும் காட்சியில் பின்னணி இசை இன்னமும் தீ’யாக இருந்திருக்கலாம். ரம்யா நபீசன் அளவான நடிப்பு, அழகு அமைதி யதார்த்தமான நடிப்பு. மூர்த்தி’யாக வரும் போலிஸ் நடிப்பும் அருமை. வீரம், விவேகம், இரண்டும் சேதுபதி’க்கு இருப்பதால் வெற்றி பெறுகிறான .

“சேதுபதி”- வெற்றி படமே .. பார்க்கலாம், ரசிக்கலாம். வழக்கமான பல காட்சிகள் வராததால் படத்தை ரசிக்கலாம். டைட்டில் காட்சிகளில் போலிஸை உயர்த்திகாட்டுவது புதிது. ஆனால் இந்த காட்சி முடிந்த்தும், எந்த ஊரு போலிஸ்டா இவங்க என்ற கமென்ட் காதுகளில் விழறதையும் கேக்காம இருக்க முடியல். ஹீரோ, வில்லன், சக அடியாட்கள் மோதல், முடிவு என்ன. புதிய காட்சிகளுடன் படம் ஓகே.

விமர்சகர்: பூரி ஜகன்.

Leave a Response