இங்கிலாந்து தேசிய கொடியை அவமானப்படுத்திய நடிகர் விஷ்ணு மீது நடவடிக்கை பாயுமா?

Velainu vandhutta vellaikaran
தற்போது நடிகர் விஷ்ணு விஷால் நடித்துக்கொண்டிருக்கும் படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்”. இப்படத்தில் அவர் கதாநாயகனாக நடிக்க அவருடன் நிக்கி கல்ராணி ஒரு காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் பரோட்ட சூரி நடிக்கிறார். எழில்மாறன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் இனைந்து இப்படத்தை தயாரிக்க S.எழில் இயக்குகிறார்.

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்று இரண்டு வகை படங்களுடன் இரு போஸ்டர்கள் இன்று மாலை வெளியிடப்பட்டது. அதில் ஒரு போஸ்டரில் கதாநாயகன் விஷ்ணு விஷாலும், கதாநாயகி நிக்கி கல்ராணியும் ஒரு திண்ணையில் அமர்ந்திருப்பதை போல் உள்ளது. அந்த போஸ்டரில் விஷ்ணு விஷால் தன்னுடைய இடது காலை அந்த திண்ணை மேல் வைத்திருப்பதை போல் அமைந்துள்ளது. இந்த போஸ்டரில் பிரச்சனைக்குரிய விஷயம் என்னவென்றால் விஷ்ணு அணிந்திருக்கும் காலனியில் (Shoe) இங்கிலாந்து நாட்டின் தேசிய கொடி அச்சிடப்பட்டுள்ளது.

எந்த ஒரு நாட்டின் தேசிய கொடியையும் அவமானப்படுத்துவது அல்லது அவமதிப்பது சட்டப்படி குற்றமாகும். அதாவது எந்த ஒரு நாட்டின் தேசிய கொடியை அவமானப்படுத்தினாலோ அல்லது அவமதித்தாலோ அந்த நாட்டின் இறையாண்மையை கெடுப்பதாகும். அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் இங்கிலாந்து நாட்டின் தேசிய கொடி அச்சிடப்பட்டுள்ள ஒரு ஷுவை அணிந்து நடித்துள்ளது அந்த நாட்டையே அவமானப்படுத்தியதாகும். அது மட்டுமின்றி அந்த புகைப்படத்தை ஒரு போஸ்டராக டிசைன் செய்து அதை ஊடகங்களுக்கு “பர்ஸ்ட் லுக்” போஸ்டர் என அனுப்பியுள்ளது அந்த நாட்டை இழிவு படுத்தும் செயலாகும். இத்தகைய செயலை ஒரு நடிகர் செய்யும் போது, அது இரு நாடுகளுக்குள் இருக்கும் நல்லுறவை கெடுக்கும் விதமாக அமைந்துவிடும்.

இந்த போஸ்டர் விவகாரம் பற்றி இந்திய வெளியுறவு துறை அமைச்சகம், காவல் துறை, நீதித்துறை அல்லது இங்கிலாந்து தூதரகத்திற்கு தெரியவந்தால் நடிகர் விஷ்ணு விஷால் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருவர் எந்த ஒரு நாட்டின் தேசிய கொடியை அவமானப்படுத்தினாலோ அல்லது அவமதித்தாலோ அவர்கள் கைது செயப்படலாம் என்று சொல்கிறது இந்திய சட்டம்.

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவ்லா தமிழ்நாடு காவல்துறையில் ஒரு முக்கிய பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய ஒரு காவல்துறை அதிகாரியின் மகனான நடிகர் விஷ்ணு விஷாலுக்கு, ஒரு நாட்டின் தேசிய கொடி அச்சிடப்பட்ட ஷுவை அணியக்கூடாது என்பது எப்படி தெரியாமல் போனது என்பது தான் தெரியவில்லை.

இந்த குற்றச்சாட்டுக்கு விஷ்ணு விஷால் என்ன செய்யப்போகிறார், அரசு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Leave a Response