கோச்சாக இருந்தாலும், நான் ஒரு பொம்பள பொறுக்கி – மாதவன்

mathavan iruthi sutru

சுதா கொங்காரா இயக்கத்தில், மாதவன், ரிதிக்கா சிங் நடித்துள்ள படம் இறுதிச்சுற்று. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சசிகாந்த், சி.வி.குமார் மற்றும் யு டி வீ நிறுவனம் இனைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ விழா மற்றும் ஊடக சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

ஊடக சந்திப்பின்போது மாதவன் கூறியதாவது, எல்லோரும் ஐ ஆம் பேக் -னு சொல்லுறாங்க. நான் எங்கயும் போகல. தமிழ் ரசிகர்கள் ரொம்பவே உஷாராயிட்டங்க, வித்தியாசமான படங்களாக எதிர்பார்க்கின்றனர். அதனால்தான் நல்ல படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று காத்திருந்து நடிக்கிறேன். அதனால்தான் 3 ஆண்டுகள் இடைவெளி விழுந்து விட்டது. இந்தப்படத்தில் நான் பாக்ஸிங் கோச்சாக நடித்துள்ளேன். ரியல் இண்டர்நேஷனல் பாக்ஸரான ரித்திகா சிங்கிற்கு பயிற்சி கொடுப்பதுபோல் நடித்திருக்கிறேன். ஒருமுறை நாக் அவுட் பண்ணுவதுபோல் அடிக்கவேண்டும் என சொன்னவுடன், நிஜமாகவே எனது கன்னத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டார். அப்போது எனது ஒரு பல் உடைந்து விட்டது. ட்ரைலரில் பார்த்தால் அறைப்பல் தெரியும். அதேபோல் இந்த படம் மாதிரி எந்த படத்திலும் நீங்கள் பாக்சிங் பார்த்திருக்க மாட்டீர்கள். படம் பார்ப்பவர்களே தாங்கள் அடிவாங்குவது போல் உணர்வார்கள்.

மேலும், சாதாரணமாக ஏழை குடும்பத்தில் உள்ளவர்கள்தான் பாக்சிங்கிற்கு வருகிறார்கள். காரணம் அவர்களுக்கு இதன்மூலமாக மத்திய அரசு வேலை கிடைக்கும் என்பதற்காக வெறியோடு பாக்ஸிங்கில் கலந்துகொள்கின்றனர். பெண்கள் பாக்சிங் டீமும் மிகப்பெரிய அளவில் சாதித்துள்ளது. அதுதான் இந்த படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு, நான் எந்த படத்தையும் வெறும் காசுக்காக மட்டுமே ஓகே பண்ணுவதில்லை. எனக்கு மனதிருப்தி தரக்கூடிய விசயங்கள் இருந்தால் மட்டுமே நடிப்பேன். அப்படித்தான் இந்த இறுதிச்சுற்று படத்தின் கதை வெகுவாக என்னை கவர்ந்தது. அதோடு, இயக்குனர் சுதா பார்ப்பதற்கு சாதுவாக இருப்பார், ஆனால் அவருக்குள் ஒரு ஹிட்லர் இருக்கிறார். கடின உழைப்பாளி. நல்ல விசயங்களை சொன்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்.

குறிப்பாக, ஒரு பெண்ணாக இருந்தும் ஒரு பெட்ரூம் சீன் வைத்துள்ளார். ஆனால் அது லிமிட்டாக உள்ளது. படத்துக்கு யு சான்றிதழ் கிடைத்திருக்கிறது., கதைப்படி கோச்சாக இருந்தாலும், நான் ஒரு பொம்பள பொறுக்கி போன்றும் நடித்துள்ளேன். சில நேரங்களில் மனநிலை இப்படியும் இருக்கும் என்பதை சொல்வதுதான் அந்த கதாப்பாத்திரம். மற்றபடி அந்த மாதிரி காட்சிகள் லிமிட் தாண்டி நடிக்கவில்லை. இறுதிச்சுற்று எனக்கு மிக முக்கியமான படம். அதோடு என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும் அந்த படத்தை சரியானபடி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்போதுதான் உழைப்பிறகு பலன் கிடைக்கும். அந்த வகையில், இந்த படத்தை வெளியிடும் யு டிவி மிகப்பெரிய அளவில் உலகமெங்கிலும் படத்தை வெளியிடுகிறார்கள். அதனால் இந்த படம் பெரிய வெற்றியை சந்திக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார் மாதவன்.

Leave a Response