தங்கமகன் திரைவிமர்சனம் – தகரத்தை தங்கமாக்கும் வீண் முயற்சி..!

thangamagan-review

தங்கமகன் திரைப்படத்திற்கு முதலில் விஐபி-2 என்ற தலைப்பை தான் வைத்தார்கள். ஆனால் படம் ரிலீசுக்கு நெருங்கும் சமயத்தில் பெயரை திடிரென தங்கமகன் என்று மாற்றினர். உண்மையிலேயே இவங்க பெயரை மாத்தினது ரொம்ப நல்லது. அப்படி ஒரு வெற்றி படம் குடுத்துட்டு, அதே டைட்டில இந்த படத்துக்கு வச்சா, அந்த படத்தோட மதிப்பு போயிரும். இருந்தாலும் இந்த படத்தை இன்னும் நிறைய பேர் விஐபி 2-னு தான் சொல்லிட்டு இருக்காங்க.

தங்கமகன் படம் 3, மயக்கம் என்ன, ஆடுகளம், விஐபி இப்படி ஏற்கனவே வெளிவந்த தனுஷ் படத்தின் கலவை தான். இதுக்கு முன் வெளிவந்த தனுஷ் படங்கள்ல இருந்து, ஒவ்வொரு கேரக்டரா உருவி இந்த படத்துல வச்சுட்டாங்க. தனுஷ் படத்துல தனுஷ் மட்டும் நடிச்ச போதுமா.. கூட இருக்க ஹீரோயின் நடிக்க வேண்டாமா. எமி ஜாக்சன் இதுக்கு முன்ன வந்த படங்கள்ல கூட பாக்குறதுக்கு அழகா இருந்தாங்க, ஆனா இந்த படத்துல நேச்சுரல் ஸ்கின்டோனோட வரேன்னு சொல்லி இருந்த கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துகிட்டாங்க. இன்னொரு ஹீரோயின் சமந்தா, அதுக்கும் மேல. கேரக்டர் நல்ல அமைஞ்சாலும், சமந்தா வர காட்சிகள் மட்டும் ஏனோ கண்ணு கூசுது. இந்த இரண்டு ஹீரோயின்களுமே படத்துக்கு மைனஸ்.

முதல்பாதி தனுஷ் லவ் பண்ணுற காட்சிகள் இளைஞர்கள் மனச கவருகின்ற மாதிரி இருந்தாலும், 3 படத்தோட சாயல் தென்படுது. ஒவ்வொரு படுத்துலையும் நல்ல நடிகருன்னு பெயர் வாங்குற தனுஷ், ஒரே மாதிரியான கதை செலக்ட் பண்ணி நல்லாவே நடிச்சாலும், பழைய படம் தான் மனசுக்குள்ள ஓடும். அதுவும் இல்லாமா தனுஷ் மூஞ்சிய பச்சை குழந்தை மாதிரியாகுறேன்னு சொல்லிட்டு, சில காட்சிகளில் மட்டும் சித்துவேல செஞ்சுருக்காங்க. ஆனா குழந்தைகள் பார்த்தால் பயந்துரும்போல. அதுவும் அதே மூஞ்சி ஒரே வருசத்துல, வேற மாதிரி மாறுறது இன்னும் ஓவரோ ஓவர்.

நடிகை ராதிகா இதுல அம்மாவ நடிச்சது அவ்ளோ கேவலம்னு சொல்ல முடியாது. இருந்தாலும் ஏதோ இடிக்குது. சீரியல் பாக்குற மக்களுக்கு, இந்த படத்த பார்த்தா வாணி ராணி சீரியல் பாக்குற மாதிரி தான் இருக்கும். டபுள் ரோல் மட்டும் இருக்காது. கே.எஸ்.ரவிகுமாருக்கு இந்த படம் ஒரு நல்ல துவக்கம். இந்த மாதிரி உங்க திறமைய நடிப்புல காட்டி மக்களை மகிழ்விக்க வேண்டும் என ஒரு அன்பு வேண்டுகோள்.

முதல்பாதி தான் படத்துல பாக்க முடியும். இரண்டாம் பாதி அப்புறம் அதுவே பழகிரூம். வில்லனுக்கு படத்துல வேலையே இல்ல. இருந்தாலும், இரண்டாம் பாதின்னு ஒன்னு இருக்கேன்னு இவங்க வச்சு ஓட்டலாம்னு ட்ரை பண்ணிருக்காங்க. ஆனா ரெண்டு வில்லனுக்கும், படத்துல பெருசா வேலையே இல்ல. தனுசுக்கு தான் படம் முழுக்க வேலை. வேலையில்லா பட்டதாரியா இருக்ககூடாதுன்னு ஒரே வேலையா குடுத்துட்டாரு போல இயக்குனர். லவ்வர்கூட வேல, பொண்டாட்டி கூட வேல, அப்பா கூட வேல, சாப்பாட்டுக் கடையில வேல, இரண்டாம் பாதி முழுக்க சி.ஐ.டி. வேல. இப்படி படம் முழுக்க உட்கார கூட நேரமில்லாம இருக்காரு தனுஷ்.

படத்துல வர்ற வசனங்களும், சதீஷ் காமெடியும் தான் படத்தை ஓரளவிற்கு தூக்கி நிறுத்துது. ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் சிறப்பு. படத்தின் இசை புதுமையாக இல்லை. ஒருவேளை, இந்த படத்தையும் விக்னேஷ் சிவன் மறைமுக இயக்கிருந்தா, படம் விஐபி மாதிரியே நல்ல வந்துருக்குமோனு தான் என்ன தோணுது.

மொத்தத்தில் தங்கமகன்  தகரத்தை தங்கமாக்க நினைக்கும் வீண் முயற்சி.

–  Satheesh Srini

Leave a Response