அறிமுக இயக்குனர் சந்திரா இயக்கத்தில் கரு.பழனியப்பன் நடிப்பில் ஆரம்பமாகிறது “கள்ளன்”:

Chandra
மந்திரப் புன்னகை படத்தைத் தொடர்ந்து இயக்குனர் கரு.பழனியப்பன் நடிக்கவிருக்கும் படம் – கள்ளன்.
தேனி,கம்பம்,தென் கேரளப் பகுதிகளில் 55 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் சந்திரா இயக்குகிறார். இவர் இயக்குநர் அமீரின் ‘ராம், பருத்தி வீரன்’, இயக்குநர் ராமின் ‘கற்றது தமிழ்’என நம்பிக்கைத் தருகிற படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிற சந்திரா ‘கள்ளன்’படத்திற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கிற கதைக்களம் இப்பொழுதே கோடம்பாக்கத்தில் அனைவரின் புருவங்களையும் உயர வைத்துள்ளது. இயக்குனர் சந்திரா ஒரு எழுத்தாளர், கவிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kallan
விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை! அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படம் “கள்ளன்”. படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்கிறார், இசை கே, பாடல்கள் நா.முத்துக்குமார் என அடுத்தடுத்து ஒவ்வொரு துறைக்கும் தேர்ந்தெடுத்து அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் சந்திரா. இப்படத்தை எட்செட்ரா என்டர்டைன்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.

1 Comment

  1. கரு.பழனியப்பன் இன்னும் சரியாக அடையாளம் காணப்படாத ஒரு நல்ல கலைஞன்

Leave a Response