வில்லனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மீரா ஜாஸ்மின்..!

திருமணம் முடிந்துவிட்டால் நம்ம தமிழ் நடிகைகள் போல நடிப்புக்கு உடனே குட்பை சொல்லிவிட மாட்டார்கள் மலையாளத்து சேச்சிகள்.. அந்தப்பட்டியலில் மீரா ஜாஸ்மினும் அடக்கம்.. வரும் வெள்ளியன்று மீரா ஜாஸ்மின் தமிழில் கதாநாயகியாக நடித்துள்ள ‘விஞ்ஞானி’ திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதில் புதுமுகமான பார்த்தி என்பவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.. இதைவிட அதிசயம் தற்போது அவர் நடித்துவரும் ‘இதினும் அப்புறம்’ என்கிற படத்தில் வில்லன் நடிகரான ரியாஸ்கானுக்கு ஜோடியாக நடித்துவருகிறார் மீரா. அவரை பொறுத்தவரை கதையைத்தான் பார்ப்பாரே தவிர கதாநாயகன் யாரென்று பார்க்கமாட்டார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே..!