‘காவியத்தலைவன்’ மூலம் ஞானவேல்ராஜா கூட்டணி புது முயற்சி..!

பொதுவாக தமிழ்சினிமாவில் தற்போதுள்ள மினிமம் கியாரண்டி வினியோக முறையில் படத்தை விற்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் வெகு குறைவாகவே இருக்கிறது. படம் லாபகரமாக ஓடினாலும் மேற்கொண்டு வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வழியில்லாமல் இருக்கிறது.

இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக என்.ஆர்.ஏ (NRA –Non Refundable Advance) அதாவது திருப்பித்தரப்படாத முன்தொகை என்கிற புதிய சிஸ்டத்தை தற்போது பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்த ஞானவேல்ராஜா கூட்டணியின் ட்ரீம் பேக்டரி தயாராகியுள்ளது..

இது ஏற்கனவே ஆந்திராவில் தற்போது நடைமுறையில் வெற்றிகரமாக உள்ள சிஸ்டம் தான்.. இதன் அடிப்படை நோக்கமே விநியோகஸ்தர்களின் ரிஸ்க்கை வெகுவாக குறைப்பதும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கவைப்பதும் தான்.

இந்த என்.ஆர்.ஏ முறையில் திருப்பித்தரப்படாத முன்தொகை பெற்றுக்கொள்ளப்படும்.. ஆனால் கிடைக்கும் லாபம் தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் சம அளவில் பிரித்து தரப்படும். தற்போது இந்த என்.ஆர்.ஏ முறையத்தான் நவ-28 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘காவியத்தலைவன்’ பட வினியோகத்தில் பின்பற்றியுள்ளார்களாம்.