களைகட்டுது சோனாக்ஷியின் டிசம்பர் சீசன்..!

பாலிவுட்டில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஆரம்பமே அசத்தலாக ‘லிங்கா’ படத்தில் சூப்பர்ஸ்டாருடன் என்பதில் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ‘லிங்கா’ வருகிற டிசம்பர்-12ஆம் தேதி ரிலீசாகிறது. சொல்லிவைத்த மாதிரி அதற்கடுத்த வாரமே அதாவது டிச-19ஆம் தேதி போனஸாக சோனாக்ஷி இந்தியில் நடித்துள்ள ‘ஆக்சன் ஜாக்சன்’ படமும் ரிலீஸாகிறது.

இந்தப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்க, நம்ம பிரபுதேவா தான் இயக்கியுள்ளார். அடுத்தடுத்த வாரங்களில் தான் நடித்த இரண்டு பெரிய படங்கள் வெளியாவதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் சோனாக்ஷி.