“‘பால்விலையை ஏற்றியதில் தவறு இல்லை”- ‘பொங்கி எழு மனோகரா’ எடிட்டரின் பால் அரசியல்..!

தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து, ‘பொங்கி எழு மனோகரா’ என்கிற பெயரில் படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ரமேஷ் ரங்கசாமி. 23 நாட்களில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாம். இர்பான் கதாநாயகனாக நடிக்க, படத்தில் இவருக்கு ஜோடியாக அர்ச்சனா, அருந்ததி நாயர் என இரண்டு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர்..

இதில் இர்பான் பால்காரனாக நடித்திருக்கிறார். இர்பானின் நண்பனாக படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார் சிங்கம்புலி. படத்தை ஆரம்பிக்க முடிவு செய்ததும் முதலில் இயக்குனர் ஷூட் பண்ணியது க்ளைமாக்ஸ் காட்சியைத்தான்.

காரணம் ஆரம்பத்தில் காமெடி காட்சிகளை எடுத்துவிட்டால் அடுத்து க்ளைமாக்ஸ் காட்சியில் எதிர்பார்த்த சோகத்தை திரையில் முழுதாக கொண்டுவர முடியாது என்பதால் தானாம். இந்தப்படத்தின் எடிட்டர் அத்தியப்பன் சிவா படம் பற்றி பேசும்போது, “நான் நகரத்தில் பிறந்து வளர்ந்தவன். இந்தப்படம் பால்காரர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படம்.

அதனால் நான் படத்தை எடிட் செய்யும்போது ஒவ்வொரு காட்சியிலும் பால்காரர்களின் கஷ்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக அறிந்துகொண்டேன்.. தற்போது பால்விலையை அரசு ஏற்றியுள்ளது. இவர்கள் படும் கஷ்டங்களை பார்க்கும்போது பால் விலையை ஏற்றியது நியாயமானதாகவே தோன்றுகிறது” என சினிமாவுக்குள் லைட்டாக அரசியலையும் இழுத்தார். வரும் டிசம்பர் மாதம் தயாரிப்பாளர் பரந்தாமனே இந்தப்படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்கிறார்.