“கத்தி’க்கு ரீமேக் வேண்டாம்.. டப் பண்ணினால் போதும்” – விஜய் ஆசை

வீக் என்ட் கலெக்ஷனாக மட்டும் 3௦ கோடிகளுக்கு மேல் அள்ளியிருக்கிறது ஏ.ஆர்.முருகதாசின் இயக்கத்தில் வெளியான விஜய்யின் ‘கத்தி’. தெலுங்கில் இருக்கும் தயாரிப்பாளர்கள் கண்கள் எல்லாம் இப்போது ‘கத்தி’ ரீமேக் ரைட்ஸை கைப்பற்றுவதில் தான் இருக்கிறதாம்.

பவன் கல்யாணை நடிக்க வைத்தால் நாமும் ஒரு அள்ளு அள்ளலாம் என ஐடியா போட்டிருக்கிறார்களாம். ஆனால் விஜயக்கோ ‘ரீமேக் ரைட்ஸை கொடுப்பதில் அவ்வளவாக விருப்பம் இல்லையாம். அதற்கு பதிலாக கத்தியை நேரடியாக தெலுங்கில் டப் செய்து ரிலீஸ் செய்யலாம் என்பதுதான் அவரது விருப்பமாம்.