ஆவடி நகராட்சிக்குட்பட்ட சாலைகளின் அவல நிலை! சில முன்னாள் காவல் துறை அதிகாரிகளும் ஒரு காரணமா?

சென்னை புறநகரில் அமைந்துள்ளது ஆவடி நகரம். இந்த நகரத்தை சுற்றி உள்ளது திருமுல்லைவாயல், அன்னனூர், பருத்திப்பட்டு, முத்தாபுதுப்பேட்டை, மிட்டினமல்லி, கோவில்பதாகை மற்றும் சில கிராமங்கள். இவ்வனைத்து கிராமங்களும் ஆவடி நகராட்சிக்கு உட்பட்டவை.

ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக அமைந்துள்ளன. குறிப்பாக திருமுல்லைவாயல் தென்றல் நகரில் உள்ள சரஸ்வதி நகர் பிரதான சாலையில் (சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை), கடந்த சில நாட்களாக சாலை ஓரமாக இரவு நேரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு அன்று இரவே அரைகுறையாக மூடப்படுகிறது. இந்த செய்தி அறிந்த நமது “ஒற்றன் செய்தி” நிருபர் அங்கு சென்று பார்த்தபோது, அந்த தோண்டப்பட்ட பள்ளங்கள் வழியாக தொலைத்தொடர்ப்பு கம்பிகள் பதிக்கப்படுவது தெரிந்துள்ளது.

பின்னர் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட எல்லையில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை பற்றியும், சரஸ்வதி நகர் பிரதான சாலையில் தோண்டப்பட்டுள்ள குழிகளை பற்றியும் ஆவடி நகராட்சியின் நகராட்சி பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் திரு.வைத்தியலிங்கம் ஆகியோரிடம் விசாரித்தோம்.

நம் நிருபர் விசாரித்ததில், ஆவடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 450 கி.மி உள்ள சாலைகளில், 360 கி.மி’க்கு சாலை ஓரமாக மழைநீர் கால்வாய் பதிக்கப்பட்டுள்ளது என்றும், அதில் 75 கி.மி மட்டும் மீண்டும் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஆவடி நகராட்சியில் நிதி பற்றாக்குறை உள்ள காரணத்தினால், மீதமுள்ள இடங்களில் சாலை அமைப்பதற்கு தாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

சரஸ்வதி நகர் பிரதான சாலையில் தொலைதொடர்பு கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளுக்கு ஆவடி நகராட்சி நிர்வாகத்திடம் எந்த ஒரு ஒப்புதலும் பெறாமல்தான் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதை போன்ற கள்ளத்தனமான சாலை தோண்டுதல் மற்றும் தொலைதொடர்பு கம்பி பதிப்பு சம்பவம் முன்பு நடந்துள்ளதாக தெரிவித்தனர். அப்போது நகராட்சி நிர்வாகம் ஒரு முறை காவல் துறையிடம் புகார் தெரிவித்ததாகவும் அதற்கு, இன்று வரை காவல் துறை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று காவல் துறை மீது நகராட்சி பொறியாளர்கள் குற்றம் சாட்டினர்.

காவல் துறை, நகராட்சியின் புகார் மீது ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதை அவர்களிடமே விசாரித்ததில் நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். பெரும்பாலான ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துறை அதிகாரிகள் தற்போது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களிலோ அல்லது அவர்களுடைய ஒப்பந்தகாரர்களிடமோ நேர்முக பணியிலோ அல்லது அந்த நிறுவனங்களின் ஆலோசகர்கலாகவோ உள்ளதாக தெரிவித்தார்கள். இதன் காரணமாக, தொலைதொடர்பு நிறுவனங்கள் இது போன்ற ஒப்புதல் இல்லாத கள்ளத்தனமான கம்பி பதிப்பு பணிகளை மேற்கொள்வதாகவும், இவர்கள் மீது நகராட்சி கொடுக்கும் புகார்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த அவல நிலை ஆவடி நகராட்சியில் மட்டும் தானா? அல்லது தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் ஊராட்சிகளிலுமா??

மக்கள் பணியில் முழு மூச்சாக இருக்கும் நமது முதல்வருக்கு இந்த செய்தி தெரிந்திருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சரையோ அல்லது நகராட்சியின் ஆணையாளரையோ அழைத்து விசாரித்திருப்பார்.

நிதி பற்றாக்குறையில் இருக்கும் ஆவடி நகராட்சிக்கு அரசு நிதி உதவி செய்யுமா? ஒப்புதல் பெறாமல் சாலைகளை தோண்டும் தொலைதொடர்பு நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா?? முன்னாள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை மீது, நகராட்சி பொறியாளர்கள் சொல்லும் குற்றச்சாட்டை பற்றி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை மேற்கொள்ளுமா??? என்பதை காத்திருந்து பார்ப்போம்!

IMG_2349

IMG_2350

IMG_2356

IMG_2360

IMG_2361

IMG_2364

IMG_2365