திருட்டுத்தனமாக வெளியான ‘ஐ’ படத்தின் டீஸரால் பாதிக்கப்படுமா இந்திய பொருளாதாரம்..?

‘எந்திரன்’ படத்திற்குப் பின், அதற்கு நிகரான செலவில், சுமார் 180கோடி ரூபாய் மதிப்பில் உருவாகியுள்ள ‘ஐ’ படத்திற்காக ஷங்கர் பிரம்மாணடமான டீஸர் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த டீஸரை சமீபத்தில் முக்கியமான சில நபர்களுக்கு மட்டும் போட்டும் காட்டியுள்ளார்..

டீஸரை பார்த்த எல்லோரும் பாராட்ட மக்கள் மத்தியில் இன்னும் எதிர்பார்ப்பு கூடியது. ஆனால் இந்நிலையில் ‘ஐ’ டீஸர் காண்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை யாரோ ஒருவர் பதிவு செய்து இன்று இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிட்டு உள்ளார். இதனால் பலத்த அதிர்ச்சியில் இருக்கிறார்களாம் ஷங்கர் மற்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இருவரும்.

இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் கூட இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள் சிலர்.. சரி.. டீஸரை ரெடி பண்ணினோமா, ரசிகர்களுக்காக ரிலீஸ் செய்தோமா என் இல்லாமல் இப்படி அடுக்குப்பானைக்குள் வெண்ணையை மறைத்து வைப்பது போல வைத்திருந்தால் ஏதாவது ஒரு பூனை சட்டியை உடைக்கத்தானே செய்யும்.. அதனால் பிரச்சனையை அமுக்குவதற்கு பேசாமல் ஒரிஜினல் டீஸரையே வெளியிட்டு விடுங்கள் என சிலர் யோசனையும் கூறி வருகிறார்களாம்.