“பார்த்திபன் இந்தமுறை கமர்ஷியலாகவும் ஜெயித்திருக்கிறார்” – கதை திரைக்கதை வசனம் இயக்கம் – விமர்சனம்

பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் படத்தை பார்க்க பத்து காரணங்கள்..

1.கதையே இல்லாமல் படம் எடுத்திருக்கிறேன் என சொல்லி உங்களை அழைத்தாலும் காட்சிகளை துண்டு துண்டாக வெட்டி ஒட்டியிருந்தாலும் அதிலும் ஒரு குட்டிக்கதை சொல்லியிருப்பது.

2.இயக்குனர் ஆக துடிக்கும் ஒரு உதவி இயக்குனரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழும் எதிர்பாராத நிகழ்வுகளை சுவராஸ்யமாக காட்சிப்படுத்தியிருப்பது.

3.கதாநாயகன் சந்தோஷுக்கும் நாயகி அகிலாவுக்குமான காதலின் அன்யோன்யத்தை அழகியலாக யதார்த்தமாக காட்டியிருப்பது.. அதிலும் கோணங்களில் அகிலாவின் முகமும் சிரிப்பும் நயன்தாராவை நினைவூட்டுவது.

4.பிரம்மாவாக வரும் பிரகாஷ்ராஜ் மனிதர்களின் தலைக்குள் மூளையை பொருத்தி அனுப்பும் லாவகமும் ஐந்து குழந்தைகளுக்கு மூளையை வைக்காமல் அனுப்பி வைத்துவிட்டு அந்தக்குழந்தைகள் இன்றைய தேதியில் யாராக உலாவருகிறார்களோ என புத்திசாலித்தனமாக காட்டி நம்மை குலுங்கவைக்கும் டெக்னிக்.

5.முப்பது வருடங்களாக இயக்குனராக முடியாமல் போராடும் தம்பி ராமையாவின் வலியை சீரியஸாக இல்லாமல் சிரிக்க சிரிக்க சொல்லி கைதட்டலை அள்ளுவது.

6.படம் ஆரம்பித்ததுமே சுனாமி காட்சியில் விஷாலையும், போர்க்கள காட்சியில் டாப்சியையும் அதிரடியாக காட்டி நம்மை கதைக்குள்(!) இழுப்பது.

7.ஆர்யா-அமலாபால் காதலை வித்தியாசமான கற்பனைத் திறனில் படைத்திருப்பது.

8.இளம்பெண்கள் இன்று உதவி இயக்குனராக மாறிவரும் சூழலை சாஹித்யா கேரக்டர் மூலமாக கண்ணியமாக, யதார்த்தமாக பதிய வைத்திருப்பது..

9.காட்சிக்கு காட்சிக்கு எங்காவது ஒரு இடத்தில் உங்களை சிரிக்கவைக்கவோ, கைதட்ட வைக்கவோ முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்றிருப்பது.

10.இன்றைய சினிமாவின் ட்ரெண்டை அப்பட்டமாக புட்டுபுட்டு வைக்கும் விதமாக கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டே கல் எறிந்திருக்கும் பார்த்திபனின் துணிச்சல்

ரிசல்ட் : பார்த்திபன் இந்தமுறை கமர்ஷியலாகவும் ஜெயித்திருக்கிறார்…..