ஜிகர்தண்டா – விமர்சனம்

ஜிகர்தண்டா படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்..?

10 காரணங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்..?

1. சினிமா பின்னணியில் படம் எடுத்தால் ஓடாது என்கிற சென்டிமென்ட்டை உடைத்ததற்காக..

2. ரவுடிக்கதை என்றாலும் அதை நேரில் பார்த்து நேட்டிவிட்டியுடன் எழுத கிளம்பும் அசட்டு துணிச்சல் கதாநாயகன் சித்தார்த்திற்காக..

3. அல்லக்கைகளுடன் டெரர் முகம் காட்டினாலும் அவனுக்குள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான் என புதிய முகம் காட்டி. சினிமா ஆசையால் தனக்கு நடிப்பு சொல்லித்தரும் மாஸ்டரிடம் வெட்கப்படாமல் அடிவாங்கும் வில்லன் பாபி சிம்ஹாவுக்காக..

4. ரவுடி என்று தெரிந்தும் அவரை மாத்து மாத்து என அடி பின்னி எடுக்கும் மாஸ்டர் முத்துவாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்திற்காக..

5. சினிமாவில் செகன்ட் ஹீரோ சான்ஸ்க்காக தனது நண்பனுடன் பல பிரச்சனைகளில் சிக்கி, இறுதியில் இவனுக்கு சுட்டுப்போட்டாலும் நடிப்பே வராது என மாஸ்டரால் ரிஜெக்ட் பண்ணப்படும் கருணாகரனின் அஷ்டகோணல் சேஷ்டைகளுக்காக..

6. ரவுடியுடன் சிநேகமாகி அவனிடமிருந்து எஸ்கேப் ஆகும் வேளையில் அவனை வைத்தே படம் எடுக்கலாமே என் கூறி சித்தார்த்தை மீண்டும் வம்பில் மாட்டிவிடும் ‘சேலை திருடி’ லட்சுமி மேனனுக்காக..

7. ரவுடியை ஹீரோவாக வைத்து அவனது மிரட்டலுக்காக பயந்து படம் எடுத்தாலும் ஒரு சினிமாகாரனாக அவனை திரையில் எப்படி ஜோக்கராக மாற்றி அவனது ரவுடியிச வாழ்க்கைக்கு முடிவுகட்ட முடியும் என காட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் யோசனைக்காக..

8. பின்னணி இசையால் விறுவிறுப்பு கூட்டியிருக்கும் சந்தோஷ் நாராயணனுக்காக..

9. ஹீரோவோ, வில்லனோ, காமேடியனோ அவனுக்கும் சரியான வசனங்களைக்கொடுத்து கைதட்டல் வாங்கித்தந்திருப்பதற்காக..

10. ரவுடி ராஜ்யத்தில் சினிமாவின் ஆதிக்கம் எப்படி செல்லுபடியாகிறது என காட்டியதின் மூலம் புதிய பாதையில் பயணித்த கார்த்திக் சுப்புராஜின் முயற்சிக்காக…

ஜிகர்தண்டாவை நீங்கள் தாராளமாக பார்க்கலாம்.