சிக்ஸ்பேக் குரூப்பில் ஒரு நியூ அட்மிஷன்..!

தற்போது ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடித்து முடித்துவிட்ட அதர்வா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் ஸ்ரீதிவ்யா அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்துக்கு இசை அமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இந்தப்படத்தை வெற்றிமாறன் பள்ளியில் இருந்து மற்றுமொரு மாணவரான, ‘ஆடுகளம்’ உட்பட 10 வருட காலம் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி அரசு என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக வருகிறார்.

இதற்காக தனது உடலை சிக்ஸ்பேக்கிற்கு மாற்றியிருக்கிறார் அதர்வா.. இதன்மூலம் சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், பரத் ஆகியோரை தொடர்ந்து சிக்ஸ்பேக் குரூப் பட்டியலில் இணைந்திருக்கிறார் அதர்வா. “இரண்டு வருடத்துக்கு முன்னாடியே அதர்வாவை மனசுல வச்சு உருவாக்கின கதை இது.. ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கிற மாதிரியான ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருக்கோம்” என்கிறார் ரவி அரசு