முகப்பேரில் ஸ்ரீ லக்ஷ்மி சாயிராம் ஜெயந்தி மஹோத்சவ பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது:

சென்னை முகப்பேர் ஏரித்திட்டதில் அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி சாய்பாபா கோவில். இந்து சாய்பாபாவின் சிலை அன்மையில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த ஆலயத்தில் முதலில் விநாயகர் சிலை மட்டும் தான் இருந்தது. பிறகு திரு.ஸ்ரீகாந்த் அவர்களின் முயர்சியால் துர்கை, முருகன், தக்க்ஷினாமூர்த்தி, நவக்கிரகங்கள், ஆஞ்சனேயர் என பல்வேரு சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகமும் கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இனிதே நடைப்பெற்றது. தற்போது ஸ்ரீலக்ஷ்மி சாய்பாபாவின் பிறந்த நாளை முன்னிட்டு புத்ர காமேஷ்டி யாகம், ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்ஸவம், ஸ்ரீ ராமர் பட்டபிஷேகம் நடைபெற்றது.

ஏப்ரல் 07, 2014 திங்கட்கிழமை காலை 9:15 மணிக்கு கணபதி பூஜை, திரிசக்தி பாராயணம் நடைப்பெற்றது. மாலை 4:00 மணிக்கு துவாரகா சாயி வருகை மற்றும் பூரண கும்ப வரவேற்பு நடைபெற்றது. மாலை 6:30 மணியளவில் ஸ்ரீ பகவத் ஆராதனை, கும்பா ஆவாஹனம், புத்ர காமேஷ் யாகம் நடைபெற்றது. ஏப்ரல் 08, 2014 செவ்வாயன்று காலை முகூர்த்தக்கால் பூஜையில் தொடங்கி, ஸ்ரீ லக்ஷ்மி கணபதிக்கு அபிஷேகம், சாயிபாபாவிற்கு துனிபூஜை மற்றும் மாலையில் ஸ்ரீ சீதாராம திருக்கல்யாணம், மாலை மாற்றுதல், ஊஞ்சல் சேவை, திருமாங்கல்ய தாரணமும் இனிதே நடந்தது.

ஏப்ரல் 10, 2014 வியாழனன்று கலையில் கோபூஜை, மாலையில் துளசி பூஜை மற்றும் ஸ்ரீ சாயிபாபவிற்கு மகாருத்ராபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. ஏப்ரல் 11, 2014 வெள்ளியன்று ஸ்ரீ லக்ஷ்மி சாயிபாப டோலோ உற்சவ சேவை கலை நிகழ்சிகள் நடந்தது. ஏப்ரல் 12, 2014 சனியன்று மாலை 6:30 மணியளவில் சாவடியில் லக்ஷ்மி சாயிபாப எழுந்தருளி நகர்வலம் வர பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு ஸ்ரீ லக்ஷ்மி சாயிபாபாவின் அருள் பெற்றனர்.

திரு.ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமை பொறுப்பேற்று, அவருடன் மற்ற கோவில் நிர்வாகிகளும், பொது மக்களும் உடன் சேர்ந்து இந்த ஆறு நாள் பூஜையை வெற்றிகரமாகவும், கோலாகலமாகவும் கொண்டாடினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் 91’வது வார்டு உறுப்பினர் திரு. பி.வி.தமிழ்செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முகப்பேரில் ஸ்ரீ லக்ஷ்மி சாயிராம் ஜெயந்தி மஹோத்சவ பெருவிழா புகைப்படங்களை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:

Click the below link to view the stills photographs of Mogappair Sri Lakshmi Sairam Jayanthi Mahotsava:

http://www.ottrancheithi.com/mogappair-sri-lakshmi-sairam-jayanthi-mahotsava/