துப்பாக்கி முனை படத்தின் ரிலீஸ் தேதி புது போஸ்டருடன் அறிவிப்பு..!

துப்பாக்கி முனை படத்தின் ரிலீஸ் தேதியை புது போஸ்டருடன் அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் துப்பாக்கி முனை. தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஹன்ஷிகாவிற்கு 50-வது படமாகும்.

கலைப்புலி எஸ் தாணுவின் வி.சி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எல்.வி முத்து கணேஷ் என்பவர் இசையமைத்துள்ளார். ராசமதி என்பவர் ஒளிபதிவு செய்ய புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். மாயப்பாண்டி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.அன்பரீவ் என்பவர் ஸ்டண்ட் பணிகளை கவனித்துள்ளார்.

விக்ரம் பிரபு, ஹன்ஷிகாவுடன் எம்.எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழுவினர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே இணையத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் டீஸர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response