சர்கார் விவகாரம் : சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல – கமலஹாசன்..!

சர்கார் படத்தின் பிரச்சனை மிகப்பெரிதாக வெடித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். விஜய் படம் என்றாலே ஆளும் மத்திய கட்சி மற்றும் மாநில கட்சியினர் போர்க்கொடி தூக்குவது என்பது அனைவரும் அறிந்ததே.  சென்னை உதயம் மற்றும் காசி தியேட்டர்களில் உள்ள சர்க்கார் பேனர்கள் கிழித்து எறியப்பட்டன. இதில் பெரும் அரசியல் உள்நோக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆளும் கட்சியினரை மட்டுமில்லாமல் அனைத்து கட்சியினரையும் விமர்சித்து இப்படத்தில் வரும் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையை மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணமாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பல வசனங்களை இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஆதரவாக சினிமா துறையிலிருந்து நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இது இப்போது சமூக வலைத்தளங்களில் மிகப் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் விஜய் ரசிகர்கள் சிறிது ஆறுதல் அடைந்துள்ளனர். முன்னர் சொன்னது போல் முறையான சான்றிதழ் பெற்ற பின்பு இதனை எதிர்ப்பது அரசியல் அராஜகம் என்று கூறப்பட்டுள்ளது.

“முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்”

 

Leave a Response