மக்கள் போராட்டத்தால் ஊருக்குள் சாராயம் விற்ற பெண் அதிரடி கைது…

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், ரேகடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் (33).

இவர், வியாழக்கிழமை இரவு அந்த ஊரில் அரசு அனுமதியின்றி விற்பனை செய்யும் ஒருவரிடமிருந்து சாராயம் வாங்கி குடித்துள்ளார். இதனால், தமிழரசன் உடல் நலக் குறைவால் உயிரிழந்தார்.

இந்த நிலையில், கிராமத்தில் சில்லறையாக சாராயம் விற்பனை செய்வதால் குடிப் பழக்கத்திற்கு   இளைஞர்கள் அடிமையாகின்றனர் என்று புகார் எழுந்தது.

இதனையடுத்து இந்த சாராய விற்பனையை  தடுக்க கோரி ரேகடஹள்ளி கிராம மக்கள் பொம்மிடி – கடத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அதனை அறிந்த , காவல்த் துறையினர் வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்திய  பிறகு மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக கடத்தூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, அரசு அனுமதியின்றி சாராயம் விற்ற ரேகடஹள்ளியைச் சேர்ந்த ராணி (65) என்பவரை பொம்மிடி காவலாளர்கள் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *