மீண்டும் திருப்பம்! விஷால் வேட்புமனு ஏற்கப்படுவதற்கு வாய்ப்பு! ..

 07-1512631880-vishal45662
 விஷால் வேட்பு மனுவை முன்மொழிந்து பின் மறுத்த 2 பேரும் இன்று மாலை 3 மணிக்குள் விளக்கமளித்தால் மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். இதற்காக அவர் ஆர்கே நகர் தொகு தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் நேற்று முன்தினம் அவரது மனுவை ஏற்பதில் குளறுபடி ஏற்பட்டது. பின்னர் நள்ளிரவில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் பிரதமர் மோடியின் டிவிட்டர் பக்கத்திலும் விஷால் புகார் அளித்தார். ஆளும்கட்சியின் மிரட்டலாலேயே தன்னை முன்மொழிந்தவர்கள் பின்வாங்கியதாக குற்றம்சாட்டினார் விஷால்.

மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரத்தையும் அவர் வெளியிட்டார். இருப்பினும் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மீண்டும் திருப்பம்

இந்நிலையில் விஷாலின் வேட்புமனுவை ஏற்பதில் மீண்டும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விஷாலின் வேட்பு மனுவை ஏற்க வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

 விஷாலின் பெயரை முன்மொழிந்து பின்னர் மறுத்த அந்த 2 பேரும் தேர்தல் ஆணையத்தில் இன்று மாலை 3 மணிக்குள் விளக்கமளித்தால் வேட்புமனுவை மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வேட்புமனுவை ஏற்க வாய்ப்பு!

குறிப்பிட்ட இருவரும் தாங்கள் மிரட்டப்பட்டது குறித்து புகார் அளித்தால் விஷாலின் வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்படும் என தேர்தல் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மிரட்டப்பட்டவர்கள் விளக்கமளித்தால் விஷாலின் வேட்புமனுவை ஏற்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது

தேர்தல் ஆணையத்தின் இந்த விஷாலின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் அதிகாரி எடுக்கும் முடிவு இறுதியானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துதிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Response