‘ஒக்கி’ புயல்: மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள்

93036ff0-4ed4-479c-9c68-8e3f0ed6d1e5

‘ஒக்கி’ புயலின் தாக்கத்தால் 2 நாட்களாக பெய்த கனமழை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை உலுக்கியது.

இதில் சனிக்கிழமையன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

திருநெல்வேலியில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்பதால் மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை. மழை குறைந்துள்ளதால் அணைகளுக்கான நீர்வரத்தும் குறைந்துள்ளது. அதேபோல தாமிரபரணி ஆற்றில் சுமார் 10,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

திருக்குறுங்குடி அருகே உடைப்பு ஏற்பட்ட பாலம் இன்னும் சீரமைக்கப்படவில்லை. சனிக்கிழமை காலை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் அங்குள்ள கட்டிடம் சிறியளவில் சேதமடைந்தது.

201712021226065245_2_kanyakumari._L_styvpf

தூத்துக்குடியில்…

தூத்துக்குடி மாவட்டம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. அங்குள்ள பெரும்பாலான குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன.

தாமிரபரணி ஆறு சங்கமிக்கும் புன்னைக்காயல் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்ததால், மக்கள் தேவாலயங்கள், திருமண மண்டபம், பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஊர் நிர்வாக கமிட்டியினரால் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மழையே இல்லாததால் தாமிரபரணி, கடலில் 6 பிரிவுகளில் கலக்கும் முகத்துவாரங்களில் 5 பிரிவுகள் மொத்தமாக மூடியுள்ளது. புன்னைக்காயல் படகுகள் செலுத்தப்படும் ஒரு பிரிவு மட்டுமே தற்போது வெள்ள நீர் கடலில் கலக்கிறது. மற்றொரு பகுதிகளிலும் வெள்ளநீர் சென்றால் விரைவில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள நீர் வடியும். அதனால் மற்ற பிரிவுகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Response