20-வது டெஸ்ட் சதம், 5000 ரன்களை எட்டினார் விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 20-வது சதத்தை எட்டியுள்ளார்.

 

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு முரளி விஜய் -தவான் இணை சிறப்பான துவக்கத்தை தந்தது. தவான், புஜாரா இருவரும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் முரளி விஜய், கேப்டன் கோலியுடன் இணைந்து நிலைத்து நின்றார்

தேநீர் இடைவேளைக்கு முன்பே முரளி விஜய் சதத்தை எட்டினார். இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர, அடுத்த சில ஓவர்களில் அணித்தலைவர் விராட் கோலியும் சதத்தை எட்டினார். இது அவரது 20-வது டெஸ்ட் சதமாகும். மேலும் இந்த போட்டியில் கோலி 94 ரன்கள் எடுத்திருந்தபோது டெஸ்ட் போட்டிகளில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

 

63-வது டெஸ்ட் போட்டியில் அவர் இதை சாதித்ததன் மூலம், வேகமாக 5000 ரன்களை எட்டிய 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

 

இந்தத் தொடரில் கோலி அடிக்கும் 3-வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சற்று முன் வரை இந்திய அணி 269 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கோலி 101 ரன்கள், முரளி விஜய் 118 ரன்கள்.

Leave a Response