4 ஆண்டுகளுக்குப் பிறகு வைகை ஆற்றில் வெள்ளம்… தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி!

IMG0247A

 

தொடர் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்குப் பிறகு தேனி மாவட்டம் வருசநாடு வைகை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஓகி புயல் காரணமாக தென்தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெளுத்து வாங்கிறது. இதே போன்று பலத்த காற்றும் வீசியது.

புயல் மற்றும் கனமழையால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. பெரும்பாலான அணைகளில் நீர் நிரம்பிவிட்ட நிலையில், கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாகவும், மரங்கள் முறிந்து விழுந்ததாலும் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

 

இந்நிலையில் தொடர் மழை காரணமாக தேனிமாவட்டம் வருசநாடு வைகை ஆற்றில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வருசநாடு அருகே மூல வைகை ஆற்றின் உற்பத்தி இடமான அரசரடி, வெள்ளிமலை, உடங்கல் ஆறு, அம்மாகஜம், வாலிப்பாறை, தும்மக்குண்டு, தண்டியக்குளம், காந்திக்கிராமம், முத்துநகர், முருக்கோடை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் குடிநீர், பாசன பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்பதால் மக்கள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பியுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Response