செல்போனில் “சாதி” பெயரை சொல்லி திட்டக்கூடாது- உச்சநீதிமன்ற உத்தரவு!

 

images (7)

உத்தரப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை, சாதிரீதியாக மிகவும் கீழ்த்தரமாக போனில் ஒருவர் திட்டியுள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போனில் சாதி பெயரை சொல்லி திட்டிய நபர் மீது, போலீசார் எஃப் ஐ ஆர் பதிவு செய்தனர்.

தன் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ தள்ளுபடி செய்யக்கோரி, அந்த அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், எஃப்.ஐ.ஆர்-ஐ தள்ளுபடி அலகாபாத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து அந்த நபர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர் மற்றும் அப்துல் நாசர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

images (8)

அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணும் தனது கட்சிக்காரரும் வெவ்வேறு இடங்களில் இருந்ததாகவும்  போன் மூலமே பேசிக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதனால் அவர் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர்-ஐ தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள், எஃப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்ய முடியாது என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது. பெண்ணை சாதி ரீதியாக மோசமாக பேசிய நபர் மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் செல்லும் என உத்தரவிட்டனர். மேலும், சாதிரீதியான மோசமான கருத்துகளை போனில் தெரிவித்தாலும் குற்றமே என்று உத்தரவிட்டனர்.

Leave a Response