1,025 வக்கீல்கள் தொழில் செய்ய பார் கவுன்சில் தடை!

bar_council_3

தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,025 வக்கீல்கள் தொழில் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:
2010-ம் ஆண்டிற்கு பின்னர் வக்கீல்களாக பதிவு செய்பவர்கள் , வக்கீல் தொழில் செய்ய வேண்டுமெனில் அகில இந்திய பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன்படி அகில இந்திய பார் கவுன்சில் தகுதி தேர்வில் 1.025 வக்கீல்கள் தேர்ச்சி பெறவில்லை . எனவே அவர்கள் வக்கீல் தொழில் செய்ய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தடை விதித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response