100 வருஷத்துல இல்லாத மழையாம்;  இப்போ எங்க தெரியுமா?

hyderabad-flood-story_647_092416113756

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நடப்பு மாதத்தில் பெய்த கனமழை, 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான மழைப் பொழிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி முதல் ஐதராபாத் நகரில் பெய்த கனமழையால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து 15 நாட்கள் வெளுத்து வாங்கிய மழை, ஓயத் தொடங்கியதை அடுத்து, மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

வானிலை ஆய்வு மைய தகவலின் படி, நடப்பு மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 248.3மிமீ மழை பதிவாகியுள்ளது. இது கடந்த 100 ஆண்டுகளில் அக்டோபர் மாதத்தில் பெய்த அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும்.

கடந்த 1916ஆம் ஆண்டு, அக்டோபரில் 355.1மிமீ மழை, ஐதராபாத் நகரில் பதிவானது. இந்நிலையில் 1916 சாதனையை முறியடிக்கும் வகையில், குறைந்த காலத்தில் அதிக மழையை பெற்றுள்ளது.

 

Leave a Response