காவிரி புஷ்கரத்தில் நீராடினார் எடப்பாடி! 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு!!

edaPADI
காவிரி துலாக்கட்டத்தில் மகாபுஷ்கரம் விழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் 24-ஆம் தேதி வரை இந்த விழா நடைபெறுகிறது. 144 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த மகா புஷ்கரம் விழாவில் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் நீங்குவதுடன், மூன்றரை கோடி தீர்த்தங்களில் நீராடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி இன்று காலை 9 மணிக்கு மகா புஷ்கர் விழாவில் பங்கேற்று புனித நீராடினார்!

KAVERI

முதல்வர் வருகையையடுத்து முன்னதாக பாதுகாப்பு பணிகள் குறித்து காவிரி துலாக்கட்டத்தில் அமைச்சர் ஒ.எஸ். மணியன் மற்றும் பேரவை உறுப்பினர்கள் ஆய்வு நடத்தினர்.

மேலும், ஐஜி, டிஐஜிக்கள் தலைமையில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் புனித நீராடிய பின்னர் நாகையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் கலந்துகொள்கிறார்.

Leave a Response