எம்.எல்.ஏ’க்கள் தகுதி நீக்க விவகாரம்; மீண்டும் கூடுகிறார்கள் திமுக எம்.எல்.ஏ’க்கள்!!

dmk
சில தினங்கள் முன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதையடுத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று மாலை திமுக எம்.எல்.ஏ’க்கள் கூட்டம் நடந்தது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ;க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், முதல்வர் பழனிசாமி, கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆகியோரை கண்டித்தும் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் திமுக தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

M_K_Stalin

அதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ’க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ஐகோர்ட் இன்று பிறப்பிக்கும் உத்தரவு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.நேற்றைய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தின் போது, மறு உத்தரவு வரும் வரை திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சென்னையிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐகோர்ட் உத்தரவு திமுகவிற்கு எதிராக இருக்கும் பட்சத்தில் இன்று மாலை நடக்கும் எம்.எல்.ஏ’க்கள் கூட்டத்திற்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த முடிவுகள் வெளியாகக்கூடும்!

Leave a Response