‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவக்கம் !

sedhu 2
‘தென்மேற்கு பருவகாற்று’, ‘தர்மதுரை’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை தொடர்ந்து விஜயசேதுபதி மற்றும் இயக்குனர் சீனுராமசாமி இணையும் படம் ‘மாமனிதன்’. இப்படம் இவர்கள் இருவருக்கும் நான்காவது படம். இவற்றில் இடம் பொருள் ஏவல் படம் இன்னும் ரிலீசாகவில்லை.

இநிலையில் ‘மாமனிதன்’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகியும் அப்படத்தின் அடுத்தகட்ட நகர்வு பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. இந்நிலையில் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவிருப்பதாக அறிவித்துள்ளார் இயக்குநர் சீனுராமசாமி. தென் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு பிரபல மனிதரின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ‘மாமனிதன்’ படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிக்கும் இதர நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

Leave a Response