சசிகுமார் நடிக்கும் ‘கொடிவீரன்’ படபிடிப்பு நிறைவு !

kodi
‘குட்டிபுலி’ படத்திற்கு பிறகு மீண்டும் முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10-ஆம் தேதி மதுரையில் துவங்கி நடந்து வந்தது. முழுக்க முழுக்க மதுரை கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. சசிகுமாருடன் மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா என 3 கதாநாயகிகள் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

மூவரில் மகிமா நம்பியாருக்குத்தான் பவர் புல்லான கேரக்டர். ‘குற்றம்-23’ படத்தில் டீச்சர் கேரக்டரில் நடித்த மகிமா நம்பியார் இந்த படத்தில் கயல் என்ற கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். 45 நாட்கள் நடந்த ‘கொடிவீரன்’ படத்தின் படப்பிடிப்பில் கிட்டத்தட்ட 40 நாட்கள் மகிமா நம்பியார் நடித்துள்ளார். சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் கொடிவீரன் படத்தின் டீஸர், டிரைலர் விரைவில் வெளியாகவிருக்கிறது. மிகவும் குறைந்த பட்ஜெட்டில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார் சசிகுமார்.

Leave a Response