ஸ்வைப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் !

swipe-elite-4g-gold._L_styvpf
ஸ்வைப் நிறுவனம் இந்தியாவில் எலைட் 4ஜி எனும் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. வோல்ட்இ வசதி கொண்ட முதல் ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர், 8 எம்பி பிரைமி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்ட ஸ்வைப் எலைட் 4ஜி 2500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்தகை சிறப்பம்சங்களுடன் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக எலைட் 4ஜி இருக்கிறது.
Swipe-Elite
சிறப்பம்சங்கள்:-

– 5.0 இன்ச் 850×480 பிக்சல் FWVGA டிஸ்ப்ளே
– 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
– 1 ஜிபி ரேம்
– 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
– 4ஜி வோல்ட்இ, வைபை,
– ப்ளூடூத் 4.0, ஜி.பி.எஸ்.
– 2500 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் ஸ்வைப் எலைட் 4ஜி பிளாக், கோல்டு மற்றும் கிரே நிறங்களில் கிடைப்பதோடு ப்ளிப்கார்ட் தளத்தில் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஸ்வைப் எலைட் 4ஜி விலை ரூ.3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Response