ஆப்பிள் ஐபோன் 8 புதிய தகவல்கள்…..

apple
ஆப்பிள் ஐபோன் 2017 பதிப்பு வெளியாக இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், புதிய சாதனம் குறித்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. ஐபோன் 8 சார்ந்து பல்வேறு வரைபடம், புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்டவை தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் புதிய ஐபோன் 8-இல் கிளாஸ் பேக் கொண்ட வடிவமைப்பு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்கள் ஐபோன் அக்சஸரீ தயாரிப்பவர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களை கொண்டு வரையப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் புதிய ஐபோன் 8-இல் செங்குத்தாக பொறுத்தப்பட்ட இரட்டை கேமரா, எட்ஜ்-டூட-எட்ஜ் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிளாஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட பின்புறம் இருப்பதால் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் அதிவேக சார்ஜிங் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் கேமரா அமைப்பு முந்தைய தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளது. மேலும் ஐபோன் 7 உடன் ஒப்பிடும் போது சற்றே அகன்ற, பெரிய மற்றும் தடிமனான ஐபோன் 8 இந்த ஆண்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்த காப்புரிமையில் டிஸ்ப்ளேவுடன் இணைக்கப்பட்ட டச் ஐடி சென்சார் மற்றும் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்ப்ளே உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்கா காப்புரிமை மற்றும் முத்திரை வழங்கும் அலுவலகம் ஆப்பிள் சமீபத்தில் பெற்ற 56 காப்புரிமைகள் சார்ந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் புதிய ஐபோனில் 3D சென்சிங் ஆக்மெண்ட்டெட் ரியாலிட்டி வசதி கொண்ட செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என்றும் இன்பராரெட் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர் மாட்யூல் தொழில்நுட்பங்களின் மூலம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

புதிய ஐபோனில் சாம்சங் OLED வகை டிஸ்ப்ளேக்களுக்கு மாற்றாக ஆப்பிள் தனது புதிய சாதனங்களில் மைக்ரோ-எல்இடிக்களை பொறுத்தலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

Leave a Response