1965-ல் வெளியான ஆயிரத்தில் ஒருவனை நினைவுட்டுகிறது: சங்கமித்ரா பர்ஸ்ட் லுக்…

sanga
நம்ம உலக சரித்திரம் படைத்த பாகுபலி படத்தை பார்த்து பல இயக்குனர்கள் இதைப்போன்று சரித்திர படத்தை இயக்க வேண்டும் என்றும் ஆசை பட்டனர். அதை ஒரு இயக்குனர் நிறை வேற்றப்போகிறார். அது யாருன்னு கேக்குறிங்களா முழுசா படிங்க தெரியும்.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘சங்கமித்ரா’. இப் படம் 8ம் நூற்றாண்டு கதையாக உருவாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கின்றனர். வாள்வீச்சில் திறமை பெற்ற வீராங்கனையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதற்காக லண்டன் சென்று, அங்குள்ள நிபுணரிடம் வாள்வீச்சு கற்று வருகிறார்.

இந்நிலையில், பிரான்ஸில் நடந்துவரும் 70வது கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இது எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவனை மீண்டும் ஞாபகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. கப்பல், கடல், ஹீரோ என்று அதே ஸ்டைலில் சங்கமித்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், சுந்தர் சி, குஷ்பு, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் உள்பட பலர் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் பட விழாவில் சங்கமித்ரா படத்தின் பர்ஸ்ட் லுக்கைத் தொடர்ந்து வரும் ஜூலை மாதம் சென்னையில் பிரத்யேக செட்டுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படயிருக்கிறது.

Leave a Response