நெடுவாசல் போராட்ட குழுவினர் முதல்வரை சந்தித்தனர்…

43095591
புதுகோட்டை மாவட்டம் நெடுவாசல் போராட்டக்குழுவினர், தலைமைசெயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினர்.புதுகோட்டை மாவட்டம் நெடுவசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.நெடுவாசல் உட்பட நாட்டில் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க பிப் 15-ம் தேதி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது எனபது குறிபிடத்தக்கது.

எரிவாயு எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அதிலிருந்து வெளியேறும் நட்சுப்பொருட்களால் காற்று, நிலம் மாசுபடும் என்பதால் தான். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கிராம மக்கள் நெடுவசலில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் மாணவர்களும் பெரும்பங்கு வகித்து வருகின்றனர்.

இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் நடத்தப்படும் என்ற நெடுவாசல் மக்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில், இன்று தலைமை செயலகத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வேணு தலைமையில் நெடுவாசல் போரட்டகுழுவினர் 10 பேர் முதல்வரை சந்தித்தனர் ,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்மென்று நெடுவாசல் போராட்டக்குழுவினர் முதல்வரை சந்தித்தது வலயுறுத்தி உள்ளனர்.

Leave a Response