கடலூரில் மாணவர்கள் மோதல் !கவலையில் பெற்றோர்கள் ஆசிரியர்கள்….

student
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
தமிழகத்திலேயே ஜாதி மோதல் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக கடலுார் மாவட்டம் அங்கம் வகித்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த மோதல் விவகாரம் முடிவுக்கு வந்து அமைதி பூங்காவாக மாறியுள்ளது.

இந்தநிலையில் அங்குள்ள அரசுபள்ளிகளில் படிக்கும் மாண்வர்களுகிடையில் மோதல் விவகாரம் ஆரம்பித்துள்ளது குறிப்பாக கடுலூர் மாவட்டத்தில்;நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்க இயலாதவர்கள் பல்வேறு எதிர்கால கனவுடன் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பி வருகின்றனர். ஆனால் நல்லது, கெட்டது எது என பகுத்து அறிவு இல்லாத வயதில் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சிறு சிறு பிரச்னைகளுக்கெல்லாம் மோதல் போக்கில் ஈடுபடும் நிலை உள்ளது.

இதனால் பள்ளிகளில் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பயம் ஏற்பட்டுள்ளது.மாணவர்களுகிடையே ஏற்படும் மோதல்களை ஆசிரியர்களால் தடுக்கமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.கடலுாரில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த மோதலில், மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் அடிக்கடி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து இருதரப்பை சேர்ந்த 7 பேர் மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரு மாணவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மாணவர்களிடையே இந்த அடிதடிகளை கூறித்து.பெற்றோர்கள், கல்வியாளர்கள் கவலை யடைந்துள்ளனர்.விழிப்புணர்வு கூட்டம் மாணவர்களின் மோதல் சம்பவத்தை தவிர்க்க கடலுாரில் நேற்று டி.ஐ.ஜி., அனிஷா உசேன் தலைமையில் விழிப்புணர்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எஸ்.பி., விஜயகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதற்கு பெற்றோர்களின் கவனம் அதிகம் தேவை என்று ஆலோசனைகள் கூறப்பட்டது.. அதேப்போல மோதல் நடந்த பள்ளிக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Leave a Response