நயன்தாரா படத்திற்கு பெயர் மாறியது..!

ஆரம்பம் படத்தில் நயன்தாராவின் கேரக்டர் பெயர் மாயா. இப்போது அதையே அவர் நடிக்கும் படம் ஒன்றிற்கு டைட்டிலாக வைத்துள்ளார்கள். இந்தப்படத்தை அஸ்வின் சரவணன் என்பவர் இயக்குகிறார். ஒரு பெண்ணிற்கும் ஒரு குழந்தைக்குமான உறவைப்பற்றி இந்தக்கதை பின்னப்பட்டுள்ளது.

முதலில் இந்தப்படத்திற்கு ‘நைட் ஷோ’ என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் குடும்பமாக படம் பார்க்க வருபவர்களின் மத்தியில் இந்த பெயர் எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் தற்போது ‘மாயா’ என மாற்றியுள்ளார்கள். ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.