கண்ணதாசா இல்ல ஜேசுதாஸா டைப்பில் குழம்பிய ப்ரியாமணி..!

கௌதம் மேனன் டைரக்ஷனில் அஜித் நடித்துள்ள ‘என்னை அறிந்தால்’ படத்தின் டீசர் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.. இந்த டீசரை பார்த்து பாராட்டியவர்களில் நடிகை ப்ரியாமணியும் ஒருவர். ஆனால் அவர் பாராட்டி போஸ்ட் செய்த ட்வீட் தான், கண்ணதாசா இல்ல ஜேசுதாஸா டைப்பில் வடிவேலு கேட்பாரே,.. அதுபோல சற்று காமெடியாக போய்விட்டது..

“அஜித் அட்டகாசமாக இருக்கிறார்.. த்ரிஷா.. சான்சே இல்லை.. மிரட்டுகிறார்.. அனுஷ்காவும் கூட அமர்க்களப்படுத்துகிறார்.. என்னால காத்திருக்க முடியாது” எங்கிற ரேஞ்சில் சரியாக புகழ்ந்த பிரியாமணி, இறுதியில் அதன் டைரக்டர் வெங்கட்பிரபு என்கிற நினைப்பில் அவருக்கான ட்வீட்டாக பதிவிட்டிருந்தார். ஆனால் சில நிமிடங்களில் யார் சொன்னார்களோ என்னவோ, “சரி.. ஒரு சின்ன மிஸ்டேக்” இதே பாராட்டை திரும்பவும் போட்டு, கௌதம் மேனன் பெயரை குறிப்பிட்டிருந்தார்.