இடிக்கப்படுமா பிரபல இயக்குனரின் கட்டிடம்? பீதியில் பெண் எம்.எல்.ஏ!

சென்னையில் உள்ள பல வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் விதிமுறை மீறலுடன் ஒரு காலத்தில் கட்டப்பட்டன. பின்னர் காலங்கள் கடக்க, சட்டங்களும் சற்று கடுமையாக விதிமுறை மீறி கட்டப்படும் வணிக வளாகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் மீது மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ நடவடிக்கை மேற்கொண்டன. அத்தகைய நடவடிக்கையினால் பல கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன, சில இடிக்கப்பட்டன.

மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ ஆகியோரின் இத்தகைய நடவடிக்கை காரணமாக பல கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ நடவடிக்கையை ரத்து செய்ய கோரியும், தடை உத்தரவு கோரியும் நீதித்துறையை நாடியுள்ளனர். நீதித்துறையும் கட்டிட உரிமையாளர்களின் சில மனுக்களை தள்ளுபடி செய்தும், சில கட்டிடங்கள் மீது மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ., மேல் நடவடிக்கை மேற்கொள்ளாதபடி தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர். பல விதிமுறை மீறல் கட்டிடங்கள் நீதித்துறை உத்தரவோடு மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ நிர்வாகத்தால் இடிக்கப்பட்டுள்ளன.

உதாரனத்திற்க்கு சொன்னால், ஒரு பழைய கட்டிடத்தை மேலோட்டமாக புதுபித்தால் அதற்கு மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ எவ்வித இன்னல்களும் கொடுப்பதில்லை. அதுவே அந்த பழைய கட்டிடத்தை இடித்து பெருமளவில் புனரமைப்பு செய்தால், அத்தகைய புதுப்பித்தல் செயலுக்கு மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ நிர்வாகத்திடம் விண்ணப்பித்து, அனுமதி பெற்றப்பின்னரே கட்டிட புனரமைப்பை தொடங்க வேண்டும்.

சென்னை சாலிகிராமத்தில், கண்ணபிரான் காலனி, 52, கண்ணம்மாள் தெருவில் உள்ள ஒரு பழைய வீடு சில மாத காலமாக இடித்து புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. முன்பு இந்த வீடு இரண்டு அடுக்குமாடி கொண்ட கட்டிடமாக இருந்தது. தற்போது புனரமைக்கப்பட்ட பிறகு முன்றாவது மாடியில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக அங்கு குடியிருப்பவர்கள் நம்மிடம் (ஒற்றன் செய்தி) புகார் தெரிவித்தனர். இதை பார்வையிட்ட நமது நிருபர் அங்கு விசாரிக்கையில், அந்த கட்டிடம் திரைப்பட இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்களுக்கு (அவருக்கோ, அவரது குடும்பத்தில் ஒருவருக்கோ)சொந்தமானது என்றும், அந்த கட்டிடத்தில் புதியதாக முன்றாவது மாடியில் கட்டிடம் கட்டியுள்ளதாக தெரிவித்து அந்த கட்டிடத்தை நமக்கு காட்டினர்.

இதைப்பற்றி உண்மையறிய “ஒற்றன் செய்தி” நிர்வாகம் மாநகராட்சி, மற்றும் சி.எம்.டி.ஏ நிர்வாகத்திற்கு 23 மற்றும் 24 செப்டம்பர் 2014 தேதிகளில் புகார் மனுக்களை அளித்தது. மனுவை பெற்ற சென்னை மாநகராட்சி நிர்வாகம், அக்டோபர் 08, 2014 அன்று ஆர்.கே.செல்வமணி அவர்களின் கட்டிடத்தை ஆய்வு செய்து அதில் கட்டிட விதிமுறை மீறல் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். பின்னர் அக்டோபர் 13, 2014 அன்று சென்னை ஷெனாய் நகரில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையர் அவர்களால் ஆர்.கே.செல்வமணி அவர்களின் மேலே சொல்லப்பட்டுள்ள விலாசத்தில் உள்ள புதியதாக புனரமைக்கப்பட்டுள்ள, கட்டிட விதிமுறை மீறல் என்று சொல்லப்படுகிற கட்டிடத்திற்கு விளக்கம் கேட்டு மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்கும்ப்படி அந்த கட்டிட உரிமையாளருக்கு (ஆர்.கே.செல்வமணி அல்லது அவரது குடும்பத்தில் ஒருவருக்கோ) நோட்டீஸ் வழங்கியுள்ளது.

நோட்டீஸை பார்த்த ஆர்.கே.செல்வமணி, தான் புனரமைத்த வீட்டை சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ இடித்துவிடுமோ என்ற கவலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆர்.கே.செல்வமணி ‘தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின்’ செயலாளராகவும், ‘நாம் தமிழர் கட்சியில்’ ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயம் அறிந்த செல்வமணியின் மனைவியும், நடிகையும், ஆந்திர பிரதேச மாநிலத்தின் ‘நகரி’ சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ’வான ரோஜா சற்று பீதி அடைந்து உள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் அவரிடம் ஏதேனும் கேள்வி எழுப்பப்படுமோ என்ற ஒரு அச்சத்தில் இருக்கிறார் எம்.எல்.ஏ’வான நடிகை ரோஜா.

செல்வமணியின் இந்த வீடு, கட்டிட விதிமுறை மீறலுடன் கட்டப்பட்டிருந்தால், சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ எத்தகைய நடவடிக்கை மேற்கொள்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

சட்டம் எல்லோருக்கும் சமம் என்பதை செல்வமணியும், அவரை போன்ற செல்வாக்கு உடையவர்களும் உணர்ந்தால் சரி.
IMG_2475

IMG_2480

IMG_2481