டெல்லியில் சென்ற தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தன் பின்னணியில் பல காரணங்கள் கூறப்படுகிறது....

சென்னை அயனாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 11 வயது மாற்றுதிறனாளி சிறுமி பல மாதங்களாக பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் சமீபத்தில் வெளியாகி...

பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் சாலையை மறித்து போராட்டம் செய்வோம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. லாரி உரிமையாளர்கள்...

ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக அரசு,சொத்து வரியை 50% முதல் 100% வரை கடுமையாக உயர்த்தியிருப்பதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகிற...

ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க....

மேட்டூர் அணை திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்....

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம் எம். ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை மாபெரும் பொருட்செலவில் ‘எம். ஜி. ஆர்’  எனும் பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது . இத்திரைப்படத்தில் எம்.ஜி .ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன்  சதிஷ் குமார் எம். ஜி. ஆர் வேடத்தில் நடிக்கிறார். எம். ஜி.ஆரின்  மனைவி  ஜானகிஅம்மையாராக ரித்விகாவும், M.R . ராதாவாக பாலாசிங்,  இயக்குநர் பந்துலுவாக Y.G மகேந்திரன், எம். ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடகக் கம்பெனிஉரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி மற்றும் பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை எட்வின் சகாய் கையாள படத்தொகுப்பை அகமது கவனிக்கிறார். எம் . ஜி . ஆர் தனது திரைப்படத்தில் கதைக்கும் தனது கதாபாத்திரத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போன்றே படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.அதனால்தான் அவரது பாடல்கள் இன்றும் சாகாவரம் பெற்று மக்களின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே போன்றே இத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் இருக்க வேண்டும்  என்பதால் எம். ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாடலாசிரியர்களான கவிஞர் புலமைப்பித்தன்,கவிஞர் முத்துலிங்கம்,  மற்றும் கவிஞர் பூவை செங்குட்டுவன் ஆகியோர் இத்திரைப்படத்திற்கு பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளனர் . இப்படத்திற்கு  ஐந்து இசையமைப்பாளர்கள்இசையமைக்க உள்ளனர். அடுத்த வாரம்  இத்திரைப்படத்தின்  ‘டீசரை’ வெளியிட உள்ளதாக ‘எம். ஜி. ஆர்’ திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர் அ. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். . சென்ற ஆண்டில் இப்படத்தின் படப்பிடிப்பினை மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்  துவக்கி வைத்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் காப்பகத்தில் இருந்த பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, அதை தட்டிக்கேட்ட பெண்ணை கொன்று புதைத்த சம்பவம் பிகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகார்...

தமிழகத்தில் காலூன்றி விளையாடும் தகுதி பாஜகவிற்கு வந்துவிட்டது என்று பாஜக எம்பி. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்து இருக்கிறார். நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் வெற்றிக்கு பின், பாஜக எம்.பி...