Rest In Peace Department – விமர்சனம்!

RIPD-Poster

ஹாலிவுட்டில் எவ்வளவோ திரைப்படங்கள் காமிக்கில் இருந்து உருவாகின்றன. அப்படி காமிக்கில் இருந்து உருவான காமெடி கலந்த ஒரு சூப்பர் நேச்சுரல் ஆக்ஷன் அட்வென்ச்சர் படம் தான் “ரெஸ்ட் இன் பீஸ் டிபார்ட்மென்ட்”. 3டியில் கலக்கலாக உருவாகியுள்ளது இந்த RIPD. Robert Schwentke இயக்கியிருக்கிறார்.

படத்தின் கதை என்னவென்றால், “”ரெஸ்ட் இன் பீஸ் டிபார்ட்மென்ட்-டில் இருந்து இரண்டு போலீஸ் அதிகாரிகள் மக்களை காக்கவும், இன்னொரு உலகத்திலிருந்து மாறுவேடத்தில் மனிதர்களோடு மனிதர்களாக கலந்து உலவும் உயிர்கள் இன்னும் நிறைய உயிர்களை அந்த உலகத்தில் இருந்து கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள். இந்த இரண்டு போலிஸ் அதிகாரிகளும் அந்த உயிர்களை தேடி கண்டுபிடித்து கைது செய்து அவர்களின் நீதிமன்றத்தில் நிறுத்துகிறார்கள். நிறைய பேரை இந்த வகையில் கைது செய்து வைத்துள்ளார்கள்.

இந்த நிலையில் அந்த கைதிகள் அங்கிருந்து தப்பிக்கிறார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியே போய் குவியலான உயிர்களை மீண்டும் கொண்டுவரும் வேலைகளில் இறங்குகிறார்கள். இவர்களை போலீஸ் அதிகாரிகள் இருவரும் பிடித்தார்களா? அந்த உயிர்கள் இங்கு வருவதை தடுத்தார்களா? அவர்களை அழித்தார்களா? என்பதே மீதி கதை.

இப்படிப்பட்ட கதையில் ஒவ்வொரு காட்சியிலும் காமெடியை அழகாக புகுத்தி ரசிகர்களை சிரிக்க வைப்பதோடு மட்டுமின்றி, ஆக்ஷனிலும் புகுந்து விளையாடுகிறார்கள். மனிதர்கள் போலவே இருந்து திடீரென அந்த உயிர்கள் மிருகங்களாக மாறுவது சூப்பர்.

படத்தில் முதன்மை கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருக்கும் Jeff Bridges and Ryan Reynolds அருமை. இருவரும் மற்றவர் பார்வைக்கு சீனாக்கார முதியவராகவும், செக்ஸி இளம்பெண்ணாகவும் தெரிவது கலகல. மற்ற கதாபத்திரங்களும் சிறப்பு. கிறிஸ்டோபர் பெக்கின் இசையும், ஆல்பர்ட் ஒளிப்பதிவும் பலம்.