இளையராஜாவின் இசை எந்த கால கட்டத்திலும் ரசிக்க கூடியது!!

AVN5_ILAYARAJA_21557f

விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் படம் “ஒரு ஊர்ல”. இந்த படத்தில் பருத்தி வீரன் வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் முறைமாமன் வேடத்தில் நடித்தவர்.

கதாநாயகியாக நேகா பட்டீல் நடிக்கிறார். இவர் கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர். இந்திரஜித், அண்ணபூரணி, நான் கடவுள் முரளி, சுந்தர், சிவா, ஜப்பான் கண்ணன், முல்லை நடலரசு, கோதண்டபாணி, மாதவி, வனஜோதி, பேபி சௌந்தர்யா என புதுமுக நடிகர்களுடன் கதாபாத்திரங்களுக்கேற்ப ஏராளமான கிராம மக்களும் நடிகர் நடிகைகளாக நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – அருள் வின்சென்ட் இவர் பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர்.  D.S.வாசன், இவர் விஜய் மில்டன் உதவியாளர். இசை – இளையராஜா கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குபவர் கே.எஸ்.வசந்தகுமார்.

படம் பற்றியும் பாடல்கள் பற்றியும் இயக்குனர் வசந்தகுமாரிடம் கேட்டோம், “இந்த படத்திற்காக இளையராஜா இசையில் வேல்முருகன் பாடிய “இப்படியும் ஒருத்தன் உண்டு அத எப்படி நான் சொல்லுவது? என்ற பாடல் பரபரப்பாக பேசப்படும். இளையராஜாவின் இசை என்பது எந்த கால கட்டத்திலும் ரசிக்க கூடிய மெலடிகள்.

இளையராஜா அவர்கள் இசை புரட்சி செய்த 1980 – 90 கால கட்டங்களில் அவரது மெலடி பாட்டுகள் எப்படி இசை புரட்சி செய்ததோ?அது மாதிரி ஒரு ஊர்ல படத்தில் அனைத்து பாடல்களும் மெலடியாக 80 – 90 கால கட்டத்தை மீண்டும் கொண்டுவரும்! அது மட்டுமல்லாமல் படத்தை முழுவதும் பார்த்து விட்டு அதற்க்கு பிறகு பாடல்கள் இசையமைக்கப்பட்டு வெற்றி பெற்ற உதிரிபூக்கள், என்ராசாவின் மனசிலே, சேது மாதிரி இளையராஜா முழு படத்தையும் பார்த்து விட்டு இசையமைத்து கொடுத்திருக்கிறார். நிச்சயம் ஒரு ஊர்ல பாடல் எல்லா ஊரிலும் ஒலிக்கும் என்றார்.

இந்த படத்தில் இந்த ஒரு பாடலை பாடிய வேல்முருகன் கூறியதாவது…சுமார் நூறு பாடல்களுக்கு மேல் பாடி விட்டேன் ..இளையராஜா இசையில் ஐந்து பேரில் ஒருவன் மூவரில் ஒருவன் என ஒன்றிரெண்டு படங்களில் பாடி இருக்கிறேன்.இந்த படத்தில் தான் முழு பாடலையும் பாடி இருக்கிறேன். அவரது ஆசிர்வாதம் எனக்கு கிடைத்தது மிகப் பெரிய மகிழ்ச்சி. நீ நல்லா பாடி பெரிய ஆளாக வா என்று ஆசிர்வதித்தார்.நிச்சயம் இந்த பாடல் எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கும் என்றார் வேல்முருகன்.