தங்கமீன்களுக்கு சர்வதேச அங்கீகாரம்!

13116_thumb_665

தங்க மீன்கள் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வு செய்யப்பட்டுக்ள்ளது. இது குறித்து இயக்குனர் ராம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

மதிப்பிற்குரியப் பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு,

வணக்கம்.

”கற்றது தமிழ்” தொடங்கி “தங்க மீன்கள்” வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து என்னை ஆதரித்து ஊக்கம் அளித்த உங்களுக்கு என் மனமர்ந்த நன்றி.

jsk film corp சார்பில் ஜே.சதிஷ்குமார் தயாரித்து நான் நடித்து இயக்கிய தங்க மீன்கள், அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 25 படங்களில் தங்கமீன்கள் ஒரே தமிழ்படம் என்பது குறிப்பிதக்கது. இது குறித்த தகவல்களை www.iffi.nic.in பெறலாம்.

மேலும் 18ஆவது சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் (தங்க யானை/THE GOLDEN ELEPHANT), பிரத்யேகமான “குழந்தைகள் உலகம்” (“Children’s World”) சமீபத்து வருடங்களில் சிறந்த உலகக் குழந்தைகள் படங்களோடு திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

18th International Children’s Film Festival India ”தங்கமீன்களை” குழந்தைகள் உலகம் என்ற பிரிவில் மற்ற உலகப்படங்களோடுத் திரையிடத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இந்த இரண்டு தகவல்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் நானும் தங்க மீன்களின் தயாரிப்பாளர் திரு.ஜே.சதிஷ்குமார் மற்றும் தயாரிப்பை ஒருங்கிணைத்த திரு.கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

நன்றிகளுடன்

ராம்.

என்று குறிப்பிட்டுள்ளார்.